Photo of Dabeli (north karnataka style) by gomathi lingam at BetterButter
476
1
0.0(0)
0

தாபேலி

Mar-31-2019
gomathi lingam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தாபேலி செய்முறை பற்றி

பன் வைத்து செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கர்நாடகா
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்-4
  2. வெங்காயம்-3
  3. உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்து-2
  4. ரெட் சட்னி-1/4 கப்
  5. புளி சட்னி-1/4கப்
  6. கரம் மசாலா-1/2டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன் மிளகாய் தூள்-1/2டீஸ்பூன்
  8. சாட் மசாலா-1/4டீஸ்பூன்
  9. மாதுளம்பழம் -1/2கப்
  10. வறுத்த வேர்க்கடலை-1/2 கப்
  11. கொத்தமல்லி-தேவைக்கேற்ப
  12. உப்பு-தேவைக்கேற்ப
  13. வெண்ணெய்-2மேஜைக்கரண்டி
  14. சேவ் (ஓமப்பொடி)-தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியதும் அதில் கரம் மசாலா மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாட் மசாலா சேர்க்கவும்
  3. மசித்த உருளைக்கிழங்குடன் சிறிது நீர் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை கிளறவும்
  4. பதம் வந்ததும் அதில் வறுத்த வேர்க்கடலை மாதுளம்பழம் வெங்காயம் சிறிது கொத்தமல்லி சேர்த்து வைக்கவும்
  5. ரெட் சட்னி : காஷ்மீரி மிளகாயை நீரில் ஊறவைத்து பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்..
  6. புளி சட்னி : புளியை தண்ணீரில் ஊற வைத்து இரு துண்டு பேரீச்சம் பழத்துடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
  7. பன்னில் ஒரு புறம் ரெட் சட்னியும் மறுபுறம் புளி சட்னியும் சேர்த்து நடுவில் இந்த மசாலாவை வைத்து கல்லில் வெண்ணெய் விட்டு பன்னை இரு புறமும் பிரட்டவும்
  8. எடுத்ததும் பன்னின் எல்லா பக்கங்களிலும் சேவை(ஓமப்பொடி) சேர்த்து பிரட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்