வீடு / சமையல் குறிப்பு / ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல்

Photo of Hogenakkal Style Vanjaram Fish Fry by Aishwarya Rangan at BetterButter
1820
0
0.0(0)
0

ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல்

Mar-31-2019
Aishwarya Rangan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் செய்முறை பற்றி

ஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்து எண்ணெயில் செய்யலாம் வாங்க

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வஞ்சரம் மீன் 1/2 கிலோ
  2. அரிசிமாவு 1 ஸ்பூன்
  3. தேவையான அளவு உப்பு
  4. சோம்பு 1/2 ஸ்பூன்
  5. கரம் மசாலா 1/4 டீஸ்பூன்
  6. மல்லி தூள் 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. சிவப்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  9. பூண்டு 6 பல்
  10. இஞ்சி சிறிய துண்டு
  11. மிளகு 1/2 ஸ்பூன்
  12. சமையல் எண்ணெய் 1/4 கப்
  13. எலுமிச்சை பழம் 1

வழிமுறைகள்

  1. பூண்டு 6 பல், இஞ்சி சிறிய துண்டு , மிளகு 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்
  2. சிவப்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித் தூள் 1 ஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், அரிசிமாவு 1 ஸ்பூன், எண்ணெய் 1 ஸ்பூன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் நன்றாக அரைத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும் அத்துடன் அரை எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்துக் கொள்ளவும்
  4. வஞ்சிரம் மீன் 1/2 கிலோ நன்றாக கழுவிய பின் அரைத்த விழுதை நன்றாக இரு பக்கமும் தடவி கொள்ளவும்
  5. சிறிதளவு அரிசிமாவை மேலே தூவிக் கொள்ளவும் என்னை கம்மியாக இருக்கும்
  6. அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும் அதன் பின்பு 3 ஸ்பூன் எண்ணை ஒரு தவாவில் சேர்த்து மீன்களை வைக்கவும்
  7. மீன் ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி 5 - 10 நிமிடம் விடவும்
  8. மீன் நன்றாக வெந்து வந்தவுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து பரிமாறலாம்
  9. இப்போது வீட்டிலேயே மிகவும் சுவையான மிகவும் எளிய முறையில் ஒகேனக்கல் ஸ்டைல் மீன் வருவல் செய்யலாம்
  10. இப்படி மீன் வறுவல் செய்து பாருங்கள் உடனடியாக காலியாகிவிடும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்