வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழ பிரதமன்

Photo of Jackfruit prathaman by sudha rani at BetterButter
308
0
0.0(0)
0

பலாப்பழ பிரதமன்

Apr-16-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழ பிரதமன் செய்முறை பற்றி

கேரள மாநிலம் பிரசித்தி பெற்ற ஒரு ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பலாப்பழம் 16
  2. முதல் தேங்காய் பால் 1 கப்
  3. இரண்டாம் தேங்காய் பால் 2 கப்
  4. நெய் 5 ஸ்பூன்
  5. வெல்லம் 3/4 கப்
  6. முந்திரி 6
  7. ஏலக்காய் 6

வழிமுறைகள்

  1. தேங்காய் உடன் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து இரண்டு முறை பால் எடுத்து வைக்கவும்
  2. இரண்டாம் தேங்காய் பாலுடன் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி வைக்கவும்
  3. பலாப்பழத்தில் இரண்டு சுளையை தனியாக எடுத்து பொடியாக நறுக்கி வைக்கவும்
  4. மீதமுள்ள பலாப்பழத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  5. வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி மற்றும் பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்
  6. பின் மீண்டும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பெரிய துண்டுகளாக நறுக்கிய பலாப்பழத்தை சேர்த்து சிறிது வதக்கி பின் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
  7. பின் அதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
  8. பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி அரைத்த விழுது சேர்த்து சிறிது வதக்கவும்
  9. பின் இரண்டாம் தேங்காய் வெல்ல கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  10. நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது முதல் தேங்காய் பால் விட்டு கலந்து விடவும்
  11. ஒரு இரண்டு நிமிடத்தில் நுரைக்க வரும் போது இறக்கி கரண்டியால் தொடர்ந்து சற்று சூடு தணியும் வரை கிளறி விடவும்
  12. பின் மேலே வறுத்த முந்திரி பலாப்பழத்தை சேர்த்து பரிமாறவும்
  13. மிகவும் நல்ல மணத்துடன் மிகவும் அற்புதமாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்