வீடு / சமையல் குறிப்பு / கல்கண்டு பொங்கல்

Photo of Kalkantu Pongal by sudha rani at BetterButter
239
0
0.0(0)
0

கல்கண்டு பொங்கல்

Apr-16-2019
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

கல்கண்டு பொங்கல் செய்முறை பற்றி

வித்தியாசமான சுவையில் மிகவும் நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பச்சரிசி 1 கப்
  2. டைமன்ட் கல்கண்டு 1_1/4 கப்
  3. மில்க்மெயின்ட் 1/4 கப்
  4. பால் 1_1/4 கப்
  5. பாதாம் 15
  6. பிஸ்தா 10
  7. முந்திரி 10
  8. திராட்சை 10
  9. நெய் 1/2 கப்
  10. ஏலத்தூள் 1 ஸ்பூன்
  11. குங்குமப்பூ 4 இதழ்
  12. ரோஸ் வாட்டர் சிறிது

வழிமுறைகள்

  1. பச்சரிசி ஐ சுமார் ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  3. கொதி வரும் போது அரிசியை சேர்த்து மிதமான தீயில் வைத்து நிதானமாக நன்கு குழைய வேகவிடவும்
  4. பாதாம் பிஸ்தா பருப்பை கொதிக்கும் நீரில் சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  5. பின் அதை தோல் உரித்து அதில் சிலதை மற்றும் எடுத்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  6. மீதமுள்ள பருப்பை சிறிது சிறிதாக பால் விட்டு நன்கு நைசாக அரைத்து எடுக்கவும்
  7. வெந்த சாதத்துடன் அரைத்த பாதாம் பிஸ்தா விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
  8. சிறிது நெய் விட்டு முந்திரி திராட்சை சேர்த்து வதக்கி எடுக்கவும்
  9. பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய பாதாம் பிஸ்தா சேர்த்து வதக்கி எடுக்கவும்
  10. கல்கண்டு உடன் ஏலக்காய் சேர்த்து நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்
  11. சாதத்துடன் பொடித்த கல்கண்டு பொடியை சேர்த்து கிளறவும்
  12. தொடர்ந்து மில்க்மெயின்ட் சேர்த்து கிளறவும்
  13. முதலில் இளகி பின் சேர்ந்து திரண்டு வரும் போது சூடான நெய் விட்டு நன்கு கிளறவும்
  14. நன்கு திரண்டு வரும் போது வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து விடவும்
  15. பின் நீளவாக்கில் நறுக்கி வறுத்து வைத்துள்ள பாதாம் பிஸ்தா குங்குமப்பூ தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்