Photo of Vendhaya kali by sudha rani at BetterButter
923
0
0.0(0)
0

வெந்தய களி

Apr-22-2019
sudha rani
540 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வெந்தய களி செய்முறை பற்றி

உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான உணவு வெயில் காலத்தில் உடலின் உஷ்ணத்தை தணிக்கும் மருந்து

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இட்லி அரிசி 100 கிராம்
  2. உளுந்து 1 டேபிள்ஸ்பூன்
  3. வெந்தயம் 25 கிராம்+2 டேபிள்ஸ்பூன்
  4. கருப்பட்டி 75 கிராம்
  5. ஏலக்காய் 6
  6. இதய நல்லெண்ணெய் 30 மில்லி
  7. உப்பு சிறிது

வழிமுறைகள்

  1. வெந்தயம் மற்றும் உளுந்தை இரண்டு முறை நன்கு அலசி பின் ஊறவிடவும்
  2. இந்த வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை கொட்ட வேண்டாம் அதை கிரைண்டரில் போட்டு அரைக்கவும் இந்த நீரில் தான் வெந்தயத்தின் குளிமை அடங்கியுள்ளது
  3. அரிசியை தனியாக ஊறவிடவும்
  4. இது இரண்டையும் தனித்தனியாக எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
  5. 2 டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை தனியாக ஊறவிடவும்
  6. பின் கிரைண்டரில் வெந்தயம் மற்றும் உளுந்தை சேர்த்து நன்கு மைய அரைத்து எடுக்கவும்
  7. அரிசி உடன் ஏலக்காய் சேர்த்து தனியாக அரைத்து எடுக்கவும்
  8. கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும்
  9. அரைத்து எடுத்த மாவுடன் கருப்பட்டி கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்
  10. கெட்டியான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும் தனியாக ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து நன்கு பொரிய விடவும்
  11. பின் கரைத்த மாவை ஊற்றி நிதானமாக வேகவிடவும்
  12. நன்கு கட்டியில்லாமல் தொடர்ந்து கிளறவும்
  13. களி கிளறும் துடுப்பை கொண்டு கிளறினால் நன்றாக திரண்டு வரும் அல்லது பருப்பு கிடையும் மத்தை கொண்டு கிளறவும்
  14. வாணலியில் ஒட்டாமல் நன்கு திரண்டு வரும் போது இறக்கி சுடச்சுட பரிமாறவும்
  15. சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்
  16. தேவைப்பட்டால் இன்னும் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளலாம்
  17. மைல்டான கசப்பு இருக்கும் ஆனால் உடலுக்கு மிகவும் நல்லது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்