வீடு / சமையல் குறிப்பு / பேரிட்ச்சை நட்ஸ் பால்கோவா புட்டிங்

Photo of Dates putting with nuts balgova by Balajayasri Dhamu at BetterButter
494
0
0.0(0)
0

பேரிட்ச்சை நட்ஸ் பால்கோவா புட்டிங்

Apr-30-2019
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பேரிட்ச்சை நட்ஸ் பால்கோவா புட்டிங் செய்முறை பற்றி

பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு,உலர்ந்த திராட்சை போன்றவை பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ஆவின் பால் 1/2லி( பச்சை நிற பாக்கெட்)
  2. பாதாம் பருப்பு10
  3. முந்திரி6
  4. திராட்சை10
  5. பேரிட்ச்சை 10 (கருப்பு நிறம்)
  6. சர்க்கரை10ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடி கனமான பாத்திரத்தில் பால் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே காய்ச்சி கொள்ள வேண்டும்.
  2. பொங்கி வந்த உடன் க அடுப்பை குறைவான அனலில் வைக்க வேண்டும்
  3. மேலே வரும் ஆடையைஒரு ஸ்பூன் வைத்து எடுத்து அதிலே போட வேண்டும்
  4. பின்னர் பால் சற்று சுண்டியதும் சர்க்கரை சேர்த்து கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும்
  5. அடி பிடித்து விடாமல் பார்த்து சற்று கெட்டியாக ஆனதும் இறக்கி கொள்ள வேண்டும்
  6. இப்போது கட் செய்து வைத்த முந்திரி பருப்பு ,பாதாம் பருப்பு,உலர்ந்த திராட்சை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். (பாதாம் பருப்பு துருவல் செய்து போடலாம்)
  7. இப்போது நட்ஸ் பால்கோவா ரெடி
  8. இப்போது பேரிட்ச்சை பழத்தை கட் செய்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கி கொள்ள வேண்டும்
  9. வாணலியில் அல்லது நான் ஸ்டில் பேனில் 2ஸ்பூன் நெய் விட்டு பேரிட்ச்சையை லைட்டாக வணக்கி எடுத்து கொள்ள வேண்டும்
  10. இப்போது நட்ஸ் பால்கோவாவை ஒவ்வொரு பேரிட்ச்சையின் உள்ளே வைத்து அதை மூடி வைக்கவும்.
  11. இப்போது சுவையான சத்தான பேரிட்ச்சை நட்ஸ் பால்கோவா புட்டிங் ரெடி..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்