ஜிலேபி - இந்தூர் பிரபலமான காலை உணவு அவுல் - ஜிலேபி | Jalebi - Part of Indore's famous breakfast Poha-Jalebi in Tamil

எழுதியவர் Roo Chi  |  2nd Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Jalebi - Part of Indore's famous breakfast Poha-Jalebi by Roo Chi at BetterButter
ஜிலேபி - இந்தூர் பிரபலமான காலை உணவு அவுல் - ஜிலேபிRoo Chi
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

1745

0

ஜிலேபி - இந்தூர் பிரபலமான காலை உணவு அவுல் - ஜிலேபி

ஜிலேபி - இந்தூர் பிரபலமான காலை உணவு அவுல் - ஜிலேபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Jalebi - Part of Indore's famous breakfast Poha-Jalebi in Tamil )

 • மாவு செய்வதற்கு:
 • 1/2 கப் மைதா
 • -2 தேக்கரண்டி கடலைமாவு
 • -1 டீக்கரண்டி சோளமாவு
 • -8-10 தேக்கரண்டி தயிர்
 • -1 சிறிய பாக்கெட் ஈனோ/ பழ உப்பு(5 கிராம் பக்கெட்)
 • -வறுப்பதற்கு எண்ணெய்
 • சர்க்கரை பாகு தயாரிக்க:
 • 1 1/2 கப் சர்க்கரை
 • - 3/4 கப் தண்ணீர்
 • -1 டீக்கரண்டி ஏலக்காய் தூள்
 • -5 துளிகள் ரோஸ் வாட்டர்
 • 1 டீக்கரண்டி பால் அல்லது எலுமிச்சை சாறு (அழுக்கு நீக்குவதற்கு)

ஜிலேபி - இந்தூர் பிரபலமான காலை உணவு அவுல் - ஜிலேபி செய்வது எப்படி | How to make Jalebi - Part of Indore's famous breakfast Poha-Jalebi in Tamil

 1. கடாயில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைக்கவும். அது கொதித்து வரட்டும்.
 2. இதில் பால்/ எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும் பின் பாகின் மேற்ப்புத்தில் வரும் அழுக்குளை தனியாக பிரித்து எடுத்து விடவும்.
 3. இதில் ஏலக்காய்த் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்துக்கொள்ளவும்.
 4. பாகின் தன்மையை சரி பார்க்கவும் (பாகினில் ஒரு துளியை விரல்களால் தொட்டு பார்க்கும் போது அது ஒரு நூல் போன்று இருந்தால் சர்க்கரை பாகு தயாரிகிவிட்டது என்று அர்த்தம்)
 5. அடுப்பை அணைத்து, பின் அதில் உணவு கலர் சேர்த்துக்கொள்ளவும், இதனை ஆரும்வரை தனியாக வைத்துக்கொள்ளவும்.
 6. இப்போது ஒரு பாத்திரத்தில் அணைத்து மாவுகளையும் கலந்துக் கொள்ளவும் (மைதா, கடலைமாவு, சோளமாவு). அதில் தயிர் சேர்த்து மென்மையான மாவாக பிணைந்துக்கொள்ளவும்.
 7. மாவில் ஈனோ/ பழ உப்பு சேர்த்து அது சமமாக பரவும் வரை விரைவாக கலக்க வேண்டும்.
 8. தட்டையான பாத்தரத்தில் எண்ணெய் ஊற்றி சூடுசெய்துக் கொள்ளவும் (அது குறைவான ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும் - அது ஆம்லேட் செய்யும் கடாயின் அளவில் இருக்க வேண்டும்)
 9. எண்ணைய் சூடானதும் தீயை குறைத்துவிடவும். மாவை சிறிய துளைக்கொண்ட குழாய் பை/ கெட்சப் பாட்டில்/ மஸ்லின் துணி/ ஜிப் லாக் பாக் ஊற்றிக்கொள்ளவும் ( மஸ்லின் துணி/ ஜிப் லாக் பாக்கில் ஒரு ஓரத்தில் சிறிய துளையிட்டு ஊற்றிக்கொள்ளவும்).
 10. இப்போது கவனமாக மாவினை நெருக்கமான வட்டமாக சுற்றி பிழிந்து கடைசி சுற்றில் மாவை அதன் நடுப்பகுதியில்/ஆரம்பித்த இடத்தில் முடிக்கவும்.
 11. உங்களால் முடிந்த அளவிற்கு மறுபடியும் இதே முறையில் ஜிலேபி செய்துக்கொள்ளவும், தீயை நடுத்தரமாக குறைத்துக்கொண்டு ஜிலேபி லேசான பொன்னிறமாக வரும் போது மறுப்பக்கத்திற்கு திருப்பிவிடவும்.
 12. அகலமான கரண்டி/ தட்டையான கரண்டி/ ஸ்ப்லிண்டர்/ இடுக்கிக் கொண்டு திருப்பி விடவும். இருப்புறமும் வெந்ததும், எண்ணெயில் இருந்து ஜிலேபியை இடுக்கியைக் கொண்டு எடுத்து உடனடியாக சர்க்கரை பாகில் போட்டுவிடவும்.
 13. இது 15 வினாடிகள் பாகில் ஊறியது மறுப்பக்கம் திருப்பி 15 வினாடிகள் ஊறவைக்கவும்.
 14. ஜிலேப்பியை பாகில் இருந்து எடுத்த பின் அதிகப்படியான பாகினை வடிக்கட்டி தனியாக தட்டில் வைத்து கொள்ளம். இதே முறையை மாவு முடியும்வரை செய்யவும்.
 15. வெட்டிய பிஸ்தாவை கொண்டு அழகுப்படுத்தி சூடாக அவுலுடன் பரிமாறவும்.

எனது டிப்:

ஜிலேபியை சர்க்கரை பாகில் சூடாகவோ அல்லது முழுமையாக குளிர்ந்த பின்னோ போடக்கூடாது சரியான பதத்தில் இல்லையெனில் அதன் சுவை சரியாக இருக்காது.

Reviews for Jalebi - Part of Indore's famous breakfast Poha-Jalebi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.