வீடு / சமையல் குறிப்பு / வெஜ் மொமொஸ்

Photo of Veg Momos by Rajul Jain at BetterButter
3352
124
4.5(0)
0

வெஜ் மொமொஸ்

Sep-24-2016
Rajul Jain
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • ஸ்டீமிங்
  • அப்பிடைசர்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 250 கிராம் மைதா
  2. 1 டீக்கரண்டி நறுக்கிய இஞ்சி
  3. 1 டீக்கரண்டி நறுக்கிய பூண்டு
  4. 100 கிராம் நறுக்கிய முட்டைகோஸ்
  5. 100 கிராம் ஊறவைத்து அரைத்துக் கொண்ட சோயா சங்ஸ்
  6. 1 டீக்கரண்டி மிளகுத்தூள்
  7. 1 டீக்கரண்டி ஆர்கனோ
  8. சுவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. மைதா மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்றி பினைந்துக் கொள்ளவும். பின் மாவை மூடி 15 நிமிடம் தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. உள்ளே வைப்பதற்கு மசாலா: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுசெய்யவும். அதில் இஞ்சி பூண்டு சேர்க்கவும். பின் இதனை 3-4 நொடிகள் வதக்கவும். பின் நன்றாக நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் சோயா விழுதை சேர்த்துக்கொளவும்.
  3. உப்பு சேர்த்துக் கொண்டு அதிக தீயில் காய்கறிகளை பாதி அளவிற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  4. மொமோசை நிரப்புவதற்கு மற்றும் வடிவத்துக்கு: மாவை உருண்டையாக உருட்டிக் கொண்டு மாவு உருண்டைகள் மீதும் மைதாவை தூவிக்கொள்ளவும். உருண்டைகளை மெல்லியதாகத் தேய்க்கவும். அதன் ஓரங்கள் மெல்லியதாகவும் நடுப்பகுதி சாதரணமாகவும் இருக்க வேண்டும்.
  5. நடுவில் போதுமான காய்கறிகளை வைக்கவும். அனைத்து ஓரங்களையும் எடுத்துக்கொள்ளவும். பின் ஓரங்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரே மையமாக மூடிக்கொள்ளவும். இதே வழியில் அனைத்து மொமொஸ்களையும் செய்து அவற்றை ஒரு ஈரமான துணியால் மூடிவைத்துக்கொள்ளவும்.
  6. இட்லி சட்டியில் தண்ணீரை சூடு செய்துக் கொள்ளவும். இப்போது தண்ணீரை கொதிக்கவிடவும். இப்போது இட்லி அச்சில் மொமொஸ்கள் ஒட்டிக் கொள்ளாமல் ஒன்றோடு ஒன்று இடைவெளி விட்டு வைத்துக் கொள்ளவும். சில நிமிடங்கள் மொமொசை வேகவிடவும் எப்பொழுது மொமொஸ் விரல்களில் ஓட்டவில்லையோ அப்போது அது தயாராகிவிட்டதாக அர்த்தம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்