புலாவுடன் சிக்கன் பிரை | Chicken fry with Pulao in Tamil

எழுதியவர் Sujata Limbu  |  7th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Chicken fry with Pulao recipe in Tamil,புலாவுடன் சிக்கன் பிரை, Sujata Limbu
புலாவுடன் சிக்கன் பிரைSujata Limbu
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1162

0

புலாவுடன் சிக்கன் பிரை recipe

புலாவுடன் சிக்கன் பிரை தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken fry with Pulao in Tamil )

 • சிக்கன் வறுவல் சேர்வைப்பொருள்கள்:
 • 450 கிராம் சிக்கன் தொடைகள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்
 • பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • புலாவ் பொருள்கள்:
 • 2 கப் பாஸ்மதி அரிசி
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 2 பிரிஞ்சி இலை
 • 1 இலவங்கப்பட்டை குச்சி (1 இன்ச்)
 • 3 கிராம்பு
 • 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
 • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கப்பட்டது
 • 1 வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
 • 5-6 முந்திரி பருப்பு பாதியாக நறுக்கப்பட்டது
 • கொஞ்சம் குங்குமப்பூத் தாள் (விருப்பம் சார்ந்தது)
 • 750 மிலி தண்ணீர்
 • 250 மிலி பால்
 • சுவைக்கேற்ற பால்

புலாவுடன் சிக்கன் பிரை செய்வது எப்படி | How to make Chicken fry with Pulao in Tamil

 1. சிக்கன் தொடைகளை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திக்கொள்க
 2. ஒரு பாத்திரத்தை எடுத்து, சிக்கனை பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு ஆகியவற்றோடு போடவும். அவற்றை நன்றாகக் கலந்து 15-30 நிமிடங்கள் மேரினேட் ஆகட்டும்.
 3. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெயைச் சூடுபடுத்தி, எண்ணெயி சூடானதும் சிக்கன் தொடைகளை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் இரண்டு பக்கமும் நன்றாகப் பொரிக்கவும்.
 4. தேவையான நிறம் சிக்கனில் தோன்றினால், ஒரு தட்டிற்கு மாற்றி கூடுதல் எண்ணெயை பேப்பர் டவல் கொண்டு உறிஞ்சி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 5. அரிசியை நன்றாகக் கழுவி அதை 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
 6. ஒரு கடாயை எடத்து அதில் எண்ணெயைச் சூடுபடுத்தி இலவங்கப்பட்டை, பிரிஞ்சி இலை, சீரகம், முந்திரி பருப்பு, கிராம்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து 1-2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 7. முந்திரி பருப்புகள் பொன்னிறமானதும், பச்சை மிளகாய், வெங்காயத்தைப் போடவும். மேலும் 2-3 நிமிடங்கள் வதக்கி வேகவைக்கவும்.
 8. அடுத்து இஞ்சிப்பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், சுவைக்கேற்ற உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது பாலை ஊற்றி கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
 9. இறுதியாக அரிசியைத் தண்ணீரோடு ஊற்றவும்.
 10. உப்பு காரம் சோதித்து தேவைக்கேற்றவாறு சரிசெய்து மிதமானச் சூட்டில் 10 நிமிடங்கள் வேகவிடவும். அதன்பின் மூடிபோட்டு மூடி மேலும் புலாவை 5 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேல் வேகவைக்கவும்.
 11. புலாவ் வெந்ததும், பரிமாறும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
 12. புலாவை வறுத்த சிக்கனோடு ஒரு பக்கம் ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Chicken fry with Pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.