வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் குருமா

Photo of Chicken Korma by Raj Bhalla at BetterButter
4072
555
4.6(0)
1

சிக்கன் குருமா

Sep-09-2015
Raj Bhalla
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • முகலாய்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 750 கிராம் சிக்கன்
  2. 3 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
  3. சுவைக்கேற்ற உப்பு.
  4. 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  5. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1 தேக்கரண்டி சிவப்பு காஷ்மீர் மிளகாய்த்தூள்
  7. 1 தேக்கரண்டி பச்சை ஏலக்காய்த்தூள்
  8. 1 தேக்கரண்டி இலவங்கத்தூள்
  9. 1 தேக்கரண்டி முழு கருமிளகு
  10. 4-5 கிராம்பு
  11. 1-2 பிரிஞ்சி இலைகள்.
  12. 7-8 பூண்டு பற்கள்
  13. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  14. 8-10 பாதாம்
  15. 1 கப் தயிர்

வழிமுறைகள்

  1. முதலில், வெங்காயத்தை நறுக்கி பெரிய கடாயில் வறுத்துக்கொள்ளவும். அதே கடாயை உங்களிடம் உள்ள சிக்கனுக்கும் பயன்படுத்தப்படும், சிக்கனை சமைப்பதற்கான எண்ணைக்கும் பயன்படுத்தப்படும்.
  2. அடர் பழுப்பு நிறத்திற்கு வந்ததும், வெளியில் எடுத்து, உலர்த்தவும். அப்போதுதான் அது மொறுமொறுப்பாக இருக்கும்.
  3. வெங்காயத்தையும் 1/4 கப் தயிரையும் ஒரு பிளண்டரில் போட்டு, மென்மையான சாந்தைத் தயாரித்துக்கொள்க.
  4. மேலும், பூண்டு விழுதையும் தயாரித்துக்கொள்க.
  5. இப்போது அதே எண்ணெயைப் பயன்படுத்தி சிக்கனையும் பூண்டு விழுதையும் சேர்த்துக்கொள்ளவும்.
  6. சிக்கன் பாதியளவு வேகும்வரை வேகவைக்கவும், சற்றே எண்ணெய் பிரியும்வரைக்கும் வேகவைக்கவும்.
  7. இப்போது பொடி செய்யப்பட்ட அனைத்துப் பொருள்களையும் முழு மசாலாக்களையும் சேர்க்கவும்.
  8. நன்றாகக் கலந்து எண்ணெய் பிரியும்வரை வேகவைக்கவும்.
  9. வேகும்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீரோடு பாதாமை மைக்ரோவேவில் 3-4 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். தோல் உரிப்பு மிகவும் எளிதாக இருக்கும். குருமாவில் சேர்க்கவும்.
  10. இப்போது வெங்காய சாந்தையும் மீதமுள்ள தயிரையும் சேர்க்கவும்.
  11. நன்றாகக் கலந்து வேகும்வரையில் அல்லது எண்ணெய் பிரியும்வரையில் வேகவைக்கவும்.
  12. இறுதியாக கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  13. நறுக்கியப் புதிய கொத்துமல்லியால் அலங்கரித்து சப்பாத்தி அல்லது நானுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்