வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் பொரியல்

Photo of Beans Poriyal by Sujata Limbu at BetterButter
2311
75
5.0(1)
0

பீன்ஸ் பொரியல்

Sep-21-2015
Sujata Limbu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 200 கிராம் பாதியாக நறுக்கப்பட்ட பிரெஞ்ச் பீன்ஸ்
  2. 2 தேக்கரண்டி உளுந்து
  3. 1 தேக்கரண்டி சீரகம்
  4. 1 தேக்கரண்டி கடுகு
  5. 1/4 தேக்கரண்டி பெருங்காயம் (ஹிங்)
  6. 1 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
  7. 5-6 கறிவேப்பிலை இலைகள்
  8. 25 கிராம் தேங்காய் புதிதாக திருவப்பட்டது
  9. 1 தேக்கரண்டி எண்ணெய்
  10. உப்பு சுவைக்கேற்றபடி

வழிமுறைகள்

  1. கடாயில்/வானலியில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. எண்ணெய் சூடானதும் கடுகையும் சீரகத்தையும் போடுக.
  2. படபடவென பொரிந்ததும், பெருங்காயம், கறிவேப்பிலை, பருப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.
  3. ஒரு நிமிடத்திற்கு அல்லது அதற்கும்மேல் நடுத்தர தீயில் வதக்கிச் சமைக்கவும்.
  4. அதன்பிறகு பீன்ஸ் போட்டு 1-2 நிமிடங்கள் கலக்கி வறுக்கவும்.
  5. அடுத்து, உப்புடன் அரை கப் தண்ணீர்விடவும், 8-10 நிமிடங்கள் நடுத்த சூட்டில் வேக விடவும்.
  6. தண்ணீர் வற்றியதும், துருவிய தேங்கயைச் சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. சாதம் அல்லது சப்பாதியுடன் விருப்பத்திற்கேற்ப சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sundara Gnanasekar
May-24-2018
Sundara Gnanasekar   May-24-2018

Adhu yena kaarm illadha poriyal

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்