எளியக் கலவைக் காய்கறி | Mixed Vegetable Handi in Tamil

எழுதியவர் Alka Jena  |  25th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mixed Vegetable Handi by Alka Jena at BetterButter
எளியக் கலவைக் காய்கறிAlka Jena
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

553

0

எளியக் கலவைக் காய்கறி

எளியக் கலவைக் காய்கறி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mixed Vegetable Handi in Tamil )

 • 25 - முந்திரி பருப்பு
 • 2 - நடுத்தர அளவு கேரட் (நறுக்கப்பட்டது)
 • 2 - நடுத்தர அளவு உருளைக்கிழங்கு (நறுக்கியது)
 • காலிபிளவர் பூக்கள் - 1/2 கப் (பூக்கள் சிறுசிறு துண்டுகளாக நறுக்கியது)
 • 15ல் இருந்து 20 எண்ணிக்கை - பிரெஞ்ச் பீன்ஸ் (சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது)
 • 1/2 கப் - பச்சை பட்டாணி
 • வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
 • 2 - நடுத்தர அளவு தக்காளி பொடியாக நறுக்கியது
 • 2 - பச்சை மிளகாய் (பொடியாக பிளக்கப்பட்டது)
 • 1 தேக்கரண்டி - இஞ்சிப்பூண்டு விழுது
 • 1 கொத்து - புதிய கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கியது
 • 1/2 தேக்கரண்டி -உலர் வெந்தயக் கீரை
 • 1/2 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/4 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
 • 3/4 தேக்கரண்டி - மல்லித்தூள்
 • 1/4 தேக்கரண்டி - கரம் மசாலா
 • 1 - பிரிஞ்சி இலை
 • 1/2 இன்ச் - இலவங்கப்பட்டை
 • 2-பச்சை ஏலக்காய்
 • 2 - கிராம்பு
 • 2 தாள் - ஜாதிப்பத்திரி
 • ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூள்
 • 2 தேக்கரண்டி - வெண்ணெய்
 • 3ல் இருந்து 4 தேக்கரண்டி - கிரீம்
 • 1 தேக்கரண்டி - உப்பு
 • 1 தேக்கரண்டி - சர்க்கரை

எளியக் கலவைக் காய்கறி செய்வது எப்படி | How to make Mixed Vegetable Handi in Tamil

 1. முந்திரி பருப்பை வெந்நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். முந்திரி பருப்பை வடிக்கட்டி சாந்தாக அரைத்து எடுத்து வைக்கவும்.
 2. அனைத்துக் காய்கறிகளையும் ஸ்டீமரில் வேகவைக்கவும். விரும்பினால் காய்கறிகளை வறுத்துக்கொள்க. இந்த உணவு உயர்தரமானதாக இருப்பதால் மேற்கொண்டு வறுப்பதையும் வேகவைப்பதையும் தவிர்த்தேன். அளவிற்கதிகமாகவோ குறைவாகவோ வேகவைக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
 3. ஒரு ஹாண்டியில் வெண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. ஹாண்டி உங்களிடம் இல்லையென்றால், வழக்கமான கடாயைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.
 4. இப்போது பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், ஜாதிபத்திரி, இலவங்கப்பட்டைக் குச்சி, கிராம்புகளை வெண்ணெயில் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
 5. பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை மறையும்வரை வதக்கவும்.
 6. நறுக்கியத் தக்காளி கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து தக்காளி மிருதுவாகவும் ஹண்டியின் பக்கவாட்டில் இருந்து எண்ணெய் பிரியும்வரையும் வதக்கவும்.
 7. மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் துஹள், மல்லித்தூள் சேர்த்து வேகமாக ஒரு கலக்குக் கலக்கவும்.
 8. இப்போது முந்திரி பருப்புச் சாந்தை 1 தேக்கரண்டி சர்க்கரையோடு சேர்த்து பக்கங்களில் இருந்து எண்ணெய் வெளியேறும்வரை வதக்கவும்.
 9. இப்போது 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பிளந்த பச்சை மிளகாய் சேர்த்து சிம்மில் சிறு தீயில் 4ல் இருந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
 10. வேகவைத்தக் காய்கறிகளை குழம்பில் போடவும். நன்றாகக் கலக்கி குழம்பில் காய்கறி சிம்மில் 2ல் இருந்து 3 நிமிடங்களோ அதற்கும் மேலோ வைக்கவும். குழம்பு அடர்த்தியானதும், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூள் சேர்க்கவும்.
 11. நசுக்கிய வெந்தய இலைகளையும் கரம் மசாலா தூளையும் கும்பில் சேர்க்கவும்.
 12. இறுதியாக கிரீம் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து எடுக்கவும்.
 13. ரொட்டி, பரோட்டா, அல்லது நான் என உங்களுக்குப் பிடித்தவற்றோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Mixed Vegetable Handi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.