பாசிப்பயிர் முறுமுறுப்பானக் கச்சோரி | Moong daal ki khasta kachori in Tamil

எழுதியவர் Anjana Chaturvedi  |  26th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Moong daal ki khasta kachori recipe in Tamil,பாசிப்பயிர் முறுமுறுப்பானக் கச்சோரி, Anjana Chaturvedi
பாசிப்பயிர் முறுமுறுப்பானக் கச்சோரிAnjana Chaturvedi
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  35

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  8

  மக்கள்

6428

0

பாசிப்பயிர் முறுமுறுப்பானக் கச்சோரி recipe

பாசிப்பயிர் முறுமுறுப்பானக் கச்சோரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Moong daal ki khasta kachori in Tamil )

 • பாசிப்பயிர் - 3/4 கப்
 • சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் நறுக்கியது - 1.5 தேக்கரண்டி
 • புதினா இலைகள் நறுக்கியது - 2 தேக்கரண்டி
 • புதிய கொத்துமல்லி நறுககியது - 2 தேக்கரண்டி
 • பெருஞ்சீரகம் நசுக்கியது - 2.5 தேக்கரண்டி
 • மல்லித்தூள் நசுக்கியது - 2 தேக்கரண்டி
 • சீரகம் - 1 தேக்கரண்டி
 • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
 • மிளகாய்த் தூள் - 2.5 தேக்கரண்டி
 • கரம் மசாலா - 1 தேக்கரண்டி
 • மாங்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
 • இஞ்சித் துருவல் - 2 தேக்கரண்டி
 • மாவிற்காக -
 • ரீபைண்டு மாவு/மைதா - 350 கிராம்*
 • சமையல் எண்ணெய் - 1/2 கப்
 • சமையல் சோடா மாவு - 1/4 தேக்கரண்டி
 • எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
 • உப்பு - 1 தேக்கரண்டி

பாசிப்பயிர் முறுமுறுப்பானக் கச்சோரி செய்வது எப்படி | How to make Moong daal ki khasta kachori in Tamil

 1. பாசிப்பயிரைக் கழுவி 1 மணி நேரத்திற்குத் தண்ணீரில் ஊறவைக்கவும். ஒரு கனமானப் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி பெருஞ்சீரகம், மல்லி, சீரகம், பெருங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய்களைச் சேர்க்கவும்.
 2. பாசிப்பயிர் ஊறவைத்தத் தண்ணீரை முற்றிலுமாக வடிக்கட்டிவிட்டு, பாத்திரத்தில் சேர்த்து வதக்கவும். உப்போடு ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து மூடி சிறு தீயில் வேகவைக்கவும்.
 3. மீதமுள்ள மசாலாக்களையும் சேர்த்து சற்றே மசித்துக்கொள்க. நறுக்கிய புதினா, கொத்துமல்லி இலைகள் சேர்த்து தீயிலிருந்து இறக்கவும்.
 4. ஒரு அகமானப் பாத்திரத்தில் ரீபைண்டு மாவு, சமையல் சோடா மாவு, உப்பு சேர்த்து கலந்துகொள்க. சமையல் எண்ணெய், எலுமிச்சை சாறு, சேர்த்து தேய்த்துக் கலந்துகொள்ளவும்.
 5. ஒரு மிருதுவான மாவைத் தயாரிப்பதற்கு, 20 நிமிடங்கள் எடுத்து வைக்கவும். சம அளவுள்ள உருண்டைகளைப் பிடித்து வைத்துக்கொள்க. பருப்புக் கலவையை சம அளவில் பூரணமாக வைக்கவும். அனைத்துப் பகுதிகளையும் மூடுக.
 6. உலர் மாவைத் தூவி நடுத்தர மொத்தத்தில் வட்ட வடிவத்தில் உருட்டவும். மிதமானச் சூட்டில் பொரித்து எடுக்கவும்.
 7. மொறுமொறுப்பாக பொன்னிறமான நிறத்தில் இருப்பக்கமும் வரும்வரை வறுக்கவும். பேப்பர் நாப்கினில் வடிக்கட்டி சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

பாதி கோதுமை மாவையும் பாதி ரீபைண்டு மாவையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

Reviews for Moong daal ki khasta kachori in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.