ஃப்யூஷன் புலாவ் | Fusion Pulao in Tamil

எழுதியவர் Preethi Prasad  |  27th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Fusion Pulao by Preethi Prasad at BetterButter
ஃப்யூஷன் புலாவ் Preethi Prasad
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    2

    மணிநேரம்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

602

0

ஃப்யூஷன் புலாவ் recipe

ஃப்யூஷன் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Fusion Pulao in Tamil )

  • 2 கப் - பாஸ்மதி அரிசி (நீள் தானியம்)
  • 1 கப் - சீமைத்தினை
  • 10-12 பன்னீர் கனசதுரத் துண்டுகள் (நடுத்தர அளவு)
  • 15 - பிரெஞ்ச் பீன்ஸ் (பிளக்கப்பட்டு நறுக்கப்பட்டது)
  • 2 - வெங்காயம் (பொடியாக நறுக்கப்பட்டது)
  • 1-கேரட் (நறுக்கப்பட்டது)
  • 2-உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு கனசதுரமாக நறுக்கப்பட்டது)
  • 1-பச்சை மணி மிளகு பொடியாக்கப்பட்டது
  • 1 தேக்கரண்டி - இஞ்சி விழுது
  • 1 தேக்கரண்டி - பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி - சீரகம்
  • 1 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
  • 1 தேக்கரண்டி - கரம் மசாலா தூள்
  • 1 தேக்கரண்டி - சப்ஜி மசாலா
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 இன்ச் இலவங்கப்பட்டை
  • 4-5 மிளகு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 தேக்கரண்டி ஆசார் (ஊறுகாய்) மசாலா
  • புத்தம்புதிய கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  • புத்தம்புதிய கொத்துமல்லி அலங்கரிப்பதற்கு
  • சுவைக்கேற்ற உப்பு

ஃப்யூஷன் புலாவ் செய்வது எப்படி | How to make Fusion Pulao in Tamil

  1. பாஸ்மதி அரிசியையும் சீமைத்தினையையும் 1 மணி நேரத்திற்கு ஊறவைத்து பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
  2. உப்பு சேர்த்து பன்னீரையும் ஆச்சாரி மசாலாவையும் 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து மிதமானச் சூட்டில் வறுக்கவும். ஆச்சாரி மசாலாவை எடுத்து வைக்கவும்.
  3. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெயைச் சூடுபடுத்தவும். சீரகம், பிரிஞ்சி இலை, மிளகு, மஞ்சள், இலவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்க்கவும். சில நொடிகள் வறுக்கவும்.
  4. வெங்காயம், இஞ்சி விழுது பூண்டு விழுதைச் சேர்த்து வெங்காயம் சற்றே பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  5. நறுக்கப்பட்ட அனைத்துக் காய்கறிகளையும், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மிதமானச் சூட்டில் காய்கறிகள் நன்றாக வேகும்வரை வரை வைக்கவும். கருகாமல் பார்த்துக்கொள்ளவும்.
  6. கரம் மசாலா, சாப்ஜி மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  7. வேகவைத்த அரிசையும் சீமைத் தினையையும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும், அப்போதுதான் மசாலா, காய்கறிகள், சாதம், சீமைத்தினை எல்லாம் ஒன்றோடு ஒன்று கலக்கும். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
  8. ஆச்சாரி பன்னீர், நறுக்கப்பட்ட கொத்துமல்லி ஆகியவற்றால் அலங்கரித்து பூந்தி ரைத்தா அல்லது உங்களுக்குப் பிடித்த எந்த ரைத்தாவோடும் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Fusion Pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.