வீடு / சமையல் குறிப்பு / தாய் பாணியிலான அன்னாசி வெள்ளரி சலாத்

Photo of Thai Style Pineapple Cucumber Salad by Meena C R at BetterButter
7554
145
4.0(0)
0

தாய் பாணியிலான அன்னாசி வெள்ளரி சலாத்

Sep-27-2015
Meena C R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தாய்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 3/4 கப் அன்னாசி துண்டுகள்
  2. 3/4 கப் வெள்ளரி தோலுரித்து நறுக்கப்பட்டது
  3. 1/4 கப் சிவப்பு மணி மிளகு நறுக்கியது
  4. 2 தேக்கரண்டி வேர்கடலை வறுத்துத் தோல் நீக்கப்பட்டது
  5. 1 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி பொடியாக நறுக்கியது
  6. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் துண்டுகள்
  7. 1/4 தேக்கரண்டி துளி துண்டுகள்
  8. டிரெசிங்கிற்கு:
  9. 1/2 தேக்கரண்டி சோயா சாஸ்
  10. 1/2 தேக்கரண்டி தேன்
  11. 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  12. 1/2 தேக்கரண்டி பூண்டு விழுது

வழிமுறைகள்

  1. ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, சோயா சாஸ், தேன், பூண்டு விழுதுகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்க. டிரெசிங்கை பிரிஜ்ஜில் வைக்கவும்.
  2. ஒரு கலவைப் பாத்திரத்தில் அன்னாசித் துண்டுகள், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய மணி மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, பிரிஜ்ஜில் வைக்கவும்.
  3. வறுத்து தோல் நீக்கப்பட்ட வேர்கடலையை பொறபொறப்பான பவுடராக அரைத்துக்கொள்க. மிக்சரில் 2 நொடிகளுக்கு ஒரு கலக்குக் கலக்கவும்.
  4. பரிமாறுவதற்கு முன் கொத்துமல்லி, துளிசித் துண்டுகள், சிவப்பு மிளகாய்த் துண்டுகளை குளிர்ந்த நறுக்கியக் காய்கறிகளில் சேர்க்கவும்.
  5. பொறபொறப்பான வேர்கடலைப் பவுடரைச் சேர்க்கவும்.
  6. குளிர்ந்த டிரெசிங்கை சலாத்தில் ஊற்றவும்.
  7. சலாதை மெதுவாகக் கிண்டவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்