வீடு / சமையல் குறிப்பு / உணவக பாணி மூலிகைகளுடைய புதிய தக்காளி சூப்பின் கிரீம்

Photo of Restaurant Style Cream of Fresh Tomato Soup with Herbs by Vibha Bhutada at BetterButter
1847
199
4.7(0)
0

உணவக பாணி மூலிகைகளுடைய புதிய தக்காளி சூப்பின் கிரீம்

Sep-30-2015
Vibha Bhutada
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • அமெரிக்கன்
  • சூப்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 - நடுத்தரத்திலிருந்து பெரிய தக்காளி
  2. 2ல் இருந்து 3 - பூண்டு பற்கள்
  3. 1 - பிரிஞ்சி இலை
  4. 2 தேக்கரண்டி - புதிய கிரீம்
  5. 1 தேக்கரண்டி - வெண்ணெய்
  6. 2 தேக்கரண்டி - தண்ணீர்
  7. 1 தேக்கரண்டி - சர்க்கரை அல்லது தேவையான அளவு
  8. 1 தேக்கரண்டி - சோள மாவு
  9. 2ல் இருந்து 3 - பிரட் துண்டுகள் (பிரௌவுன் வெள்ளை அல்லது முழு கோதுமை)
  10. தேவையான அளவு புதிதாக நசுக்கப்பட்ட கருமிளகு
  11. வேர்கோசு, புதிய துளசி, கொத்துமல்லி அலங்கரிப்பதற்காக
  12. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் தக்காளியை நன்றாக அலசி எடுத்துவைக்கவும். தண்டுகள் இருந்தால் நீக்கவும். 1 தேக்கரண்டி சோளமாவு 2 தேக்கரண்டி தண்ணீர் கலந்து எடுத்துவைக்கவும்.
  2. ஒரு சாஸ் பாத்திரத்தில் போதுமானத் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும், தக்காளி முழுமையாக மூழ்கும் அளவிற்கு.
  3. 1 தேக்கரண்டி உப்பைத் தண்ணீரில் சேர்த்து தண்ணீரை கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  4. தக்காளி சேர்த்து அடுப்பை நிறுத்துக. சாஸ்பேனை ஒரு மூடியால் மூடுக.
  5. தக்காளி வெந்நீரில் 20-30 நிமிடங்கள் மூழ்கியிருக்கட்டும்.
  6. இதற்கிடையில், பூண்டை நறுக்கி எடுத்து வைக்கவும்.
  7. ஒரு வறுவல் கடாயில்/தவாவில் பிரெட்டைவைத்து சிறுதீயில் அது பொன்னிறமாக இருப்பக்கமும் முறுமுறுப்பாக மாறும்வரை டோஸ்ட் செய்யவும்.
  8. பிரெட் டோஸ்ட் செய்யப்பட்டபிறகு துண்டுகளாக நறுக்கிக்கொள்க.
  9. மென்மையானச் சாந்தாக 1 தேக்கரண்டி சோளமாவு 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  10. தக்காளியை வடிக்கட்டி சூடுபடத்தவும் அல்லது ஆறவிடவும்.
  11. தக்காளி தோல் உரித்து தக்காளியின் கண்களை நீக்கிடவும். பிறகு பிளண்டர் ஜாரில் நேரடியாக நறுக்கவும். அப்போதுதான் அதன் சாறு நேரடியாக ஜாரில் விழும்.
  12. இதை உங்களால் செய்ய இயலவில்லை என்றால், பலகையில் நறுக்கி எல்லாவற்றையும் சாறோடு பிளண்டரில் போடவும்.
  13. தக்காளியைச் சாந்தாக அரைத்துக்கொள்க.
  14. வெண்ணெயை ஒரு கடாயில் உருக்கி 5-6 நொடிகள் வதக்கவும். பூண்டு சேர்த்து 10-12 நொடிகள் சிறு தீயில் வதக்கவும்.
  15. இப்போது தக்காளி சாந்தைச் சேர்க்கவும். கலக்கி அதன்பின்னர் உப்பு மிளகு சேர்க்கவும்.
  16. சிறு தீயில் இருந்து மிதமானத் தீ வரை சூப் சற்றே கொதி வரும்வரை விடவும்.
  17. சோளமாவுச் சாந்தைக் கலக்கி அதனைச் சூப்பினுள் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி சிம்மில் 4-5 நிமிடங்கள் சூப் சிறு தீயில் அடர்த்தியாகும் வரை விடவும்.
  18. இப்போது சர்க்கரை சேர்த்து கலக்கவும். கிரீம் சேர்த்து சிம்மில் ஒரு நிமிடம் விடவும்.
  19. ஆவி பறக்கும் சூடான தக்காளி சூப்பை சூப் கிண்ணங்களில் ஊற்றவும்.
  20. பிரெட் துண்டுகளை சூப்பில் சேர்க்கவும் அல்லது அதன் மீது வைக்கவும்.
  21. கொஞ்சம் கிரீம், வேர்க்கோசு, புதிய துளசி, கொத்துமல்லி இலைகளால் சூப்பை அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்