வீடு / சமையல் குறிப்பு / வெஜ் ஃபாஜிட்டா

Photo of Veg Fajita by sagarika kv at BetterButter
1973
139
4.5(0)
0

வெஜ் ஃபாஜிட்டா

Oct-04-2015
sagarika kv
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • மெக்ஸிகன்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்தி/மாவு டார்டில்லா 7
  2. பெரிய வெங்காயம் 1
  3. சிவப்பு மணி மிளகு 1
  4. பச்சை மணி மிளகு 1
  5. மஞ்சள் மணி மிளகு 1
  6. இனிப்பு சோளம் 1/2 கப்
  7. பட்டன் காளான் 8
  8. கொத்துமல்லி இலைகள் கையளவு
  9. பச்சை மிளகாய் / மிளகாய்த் தூள் 1 மற்றம் 1/2 தேக்கரண்டி (சுவைக்கேற்ற அளவு)
  10. சீரகத் தூள் 1 மற்றும் 1/2 தேக்கரண்டி
  11. எலுமிச்சை 2 தேக்கரண்டி
  12. சாட் மசாலா 1 தேக்கரண்டி
  13. சுவைக்கேற்ற உப்பு
  14. ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டி
  15. உவர்ப்பு கிரீம் சுவைக்காக (விருப்பம்)
  16. கெச்சப்/கார சால்சா - பரவலுக்காக
  17. டார்டில்லா மொறுவல் (விருப்பம்)

வழிமுறைகள்

  1. அனைத்துக் காய்கறிகளையும் நீளவாக்கி வெட்டி எடுத்து வைக்கவும்.
  2. ஒரு இரும்பு வானலியை எடுத்து, அனைத்துக் காய்கறிகளையும் இரும்பு வானலியில் போடவும். (அடுப்பை நிறுத்தவேண்டாம்)
  3. ஆலிவ் எண்ணெய், மிளகாய்த் தூள், சீரகத் தூள் சேர்த்து அனைத்துக் காய்கறிகளும் நன்றாக மிளகாய் சீரகத் தூள் பூசப்படும்வரை கலக்கவும்.
  4. பரிமாறுவதற்கு முன் இரும்பு வானலியை அடுப்பில் உயர் தீயில் வைத்து பொரிக்கவிடவும்.
  5. 5-7 நிமிடங்கள் அடுப்பில் காய்கறிகள் மொறுவலாக வேகும்வரை கலக்கவும். (நீண்ட நேரம் வேகவைக்கவேண்டாம், இல்லையேல் காய்கறிகள் சொதசொதப்பாகிவிடும்)
  6. கொத்துமல்லி எலுமிச்சை சாறைச் சேர்த்து ஒரு முறை கலக்கி, அடுப்பை நிறுத்தவும்.
  7. ஒரு சப்பாத்தி/டார்டில்லாவை வைத்து, கெச்சப்பை/கார சால்சாவை பரப்பி ஒரு கரண்டி ஃபஜிட்டாவை மத்தியில் வைக்கவும்.
  8. சாட் மசாலாவைத் தூவி, கொஞ்சம் உவர்ப்பு கிரீமை டார்டில்லா மொறுவல்களை வைத்து பொட்டலம் கட்டிக்கொள்க. சூடாகப் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்