வீடு / சமையல் குறிப்பு / வெங்காயம் பூண்டு இல்லாத காய்கறி புலாவ்

Photo of No onion-No Garlic Vegetable Pulao by Srividhya Ravikumar at BetterButter
87
192
5.0(0)
0

வெங்காயம் பூண்டு இல்லாத காய்கறி புலாவ்

Oct-06-2015
Srividhya Ravikumar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி: 1 கப்
  2. தேங்காய் பால்: 1/2 கப்
  3. தண்ணீர்: 1/2 கப்
  4. நறுக்கப்பட்ட கேரட்:1/4 கப்
  5. பச்சைப்பட்டாணி: 1தேக்கரண்டி
  6. நறுக்கப்பட்ட குடமிளாகாய்: 1/4 கப்
  7. நறுக்கப்பட்ட இஞ்சி :1/4 தேக்கரண்டி
  8. ஷாஜி சீரகம்: 1/4 தேக்கரண்டி
  9. பிரிஞ்சி இலை:1
  10. ஏலக்காய்:2
  11. பச்சை மிளகாய்:3
  12. கொஞ்சம் கொத்துமல்லி நறுக்கப்பட்டது
  13. கொஞ்சம் புதினா இலைகள் நறுக்கப்பட்டது
  14. தேவையான அளவு எண்ணெய்
  15. தேவையான அளவு நெய்
  16. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியைக் கழுவி 1/2 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் தேங்காய் பால் கலவையில் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
  2. ஒரு தேக்கரண்டி எண்ணெய் 1 தேக்கரண்டி நெய்யை ஒரு கனமான அடிப்பாகமுள்ள கடாயில் சூடுபடுத்தவும். ஷாஹி சீரகம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
  3. அடுத்து பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட இஞ்சியைச் சேர்த்து வறுக்கவும்.
  4. பிறகு, நறுக்கப்பட்ட கேரட், பச்சைப் பட்டாணி சேர்க்கவும், இந்தப் பொருள்களை நன்றாகக் கலக்கவும்.
  5. இப்போது தண்ணீர் தேங்காய் பால் கலவையில ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும்
  6. சுவைக்கு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
  7. அரிசி தண்ணீரை உறிஞ்சும்வரை மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  8. தீயைக் குறைத்து, நறுக்கப்பட்ட குடமிளகாய், கொத்துமல்லி, புதினா இலைகளைப் போட்டு, ஒரு மூடியால் மூடி வேகவைக்கவும்.
  9. அடுப்பை நிறுத்தி சில நிமிடங்கள் அப்படியே விடவும்.
  10. உங்களுக்கு விருப்பமான எந்தவொரு பக்க உணவோடும் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்