வீடு / சமையல் குறிப்பு / சோளம் இட்லி உப்மா

Photo of Corn Idli Upma by Krithika Chandrasekaran at BetterButter
1736
73
0.0(0)
0

சோளம் இட்லி உப்மா

Oct-07-2015
Krithika Chandrasekaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த சோளம் - 1 கப்
  2. மீந்துபோன இட்லிகள் - 4ல் இருந்து 5 வரை (கனசதுரமாக)
  3. பச்சை மிளகாய் - 1 (துண்டு)
  4. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  5. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  6. சீரகம் - 1 தேக்கரண்டி
  7. நறுக்கப்பட்ட இஞ்சி - 1 தேக்கரண்டி
  8. கடுகு - 1/2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை - கொஞ்சம்
  11. நறுக்கப்பட்ட கொத்துமல்லி - கொஞ்சம்
  12. சுவைக்குத் தேவையான உப்பு

வழிமுறைகள்

  1. எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தவும். சீரகத்தைச் சேர்த்து வெடிக்கவிடவும். இப்போது கடுகைச் சேர்த்து அதையும் வெடிக்கவிடவும்.
  2. திருவப்பட்ட இஞ்சியைச் சேர்த்து வதக்கி, அதைத் தொடர்ந்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
  3. இப்போது வேகவைத்த சோளம், சுவைக்கேற்ற உப்பு பெருங்காயம் சேர்க்கவும். நன்றாகப் பிறட்டிவிட்டு, மூடி 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  4. இப்போது இட்லி துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சில நிமிடங்களுக்கு வேகவிடவும் அப்போதுதான் இட்லி சுவை நன்றாக ஊறும்.
  5. அடுப்பிலிருந்து எடுத்து எலுமிச்சை சாறு நறுக்கப்பட்ட கொத்துமல்லியைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்