வீடு / சமையல் குறிப்பு / கலவை சிவப்பு சட்டினி

Photo of Mixed red chutney  by Krithika Chandrasekaran at BetterButter
1170
16
0.0(0)
0

கலவை சிவப்பு சட்டினி

Oct-07-2015
Krithika Chandrasekaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கப்பட்ட சிவப்பு பூசணி - 1/2 கப்
  2. நறுக்கப்பட்ட தர்பூசணி பத்தை - 1/2 கப்
  3. கனசதுரமாக நறுக்கப்பட்ட காப்சிகம் - 1/4 கப்
  4. கேரட் - 1 (நறுக்கப்பட்டது)
  5. காய்ந்த மிளகாய் - 1 பெரியது
  6. உடைத்த உளுந்து - 1 தேக்கரண்டி
  7. புளி - பாதியளவு
  8. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  9. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 1/4 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்திக்கொண்டு, உளுந்து சிவப்பு மிளகாயைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்ளவும், கருகிடாமல் பார்த்துக்கொள்ளவும். எடுத்து பெருங்காயம் சேர்த்து சற்றே கலக்கிக்கொள்ளவும். ஆறவிடவும்.
  2. அதே கடாயில 2 தேக்கரண்டி எண்ணெயை எடுத்துக்கொண்டு சூடாக்கிக்கொள்ளவும், நறுக்கப்பட்ட பூசணை, தர்பூசணைப் பத்தைகள், கேரட், குடமிளகாய் ஆகியவற்றை சேர்த்து, வதக்கவும்.
  3. சிறிது உப்பைத் தூவி, மூடி, சிறுதீயில் காய்கறிகள் சற்றே மென்மையாகும்வரை சமைக்கவும். எடுத்து ஆறவைக்கவும்.
  4. ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்து, சிவப்பு மிளகாய் சேர்த்து நன்றாக மென்மையானத் தூளாக அரைத்துக்கொள்ளவும். இப்போது காய்கறிகளை புளித்துண்டு தேவையான உப்போடு சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் விடாமல் நன்றாகச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் மாற்றி விருப்பப்படி பரிமாறவும். இரு ஒரு வாரத்திற்குக்கூட வைத்துக்கொள்ளலாம், பிரிட்ஜில் இருந்தால்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்