வீட்டில் தயாரிக்கப்பட்ட ரசமலாய் | Homemade Rasmalai in Tamil

எழுதியவர் Niharika Bhide  |  6th Mar 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Homemade Rasmalai by Niharika Bhide at BetterButter
வீட்டில் தயாரிக்கப்பட்ட ரசமலாய்Niharika Bhide
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  59

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

3130

0

வீட்டில் தயாரிக்கப்பட்ட ரசமலாய் recipe

வீட்டில் தயாரிக்கப்பட்ட ரசமலாய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Homemade Rasmalai in Tamil )

 • சென்னா தயாரிப்பதற்கு-
 • பால் 500 மிலி
 • எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
 • வெனிகர் 1 தேக்கரண்டி
 • சோளமாவு 2 தேக்கரண்டி
 • பாகிற்கு -
 • சரக்கரை 1 கப்
 • தண்ணீர் 4 கப்
 • மசாலா பாலுக்கு-
 • பால் 300 மிலி
 • சர்க்கரை 5 தேக்கரண்டி
 • குங்குமப்பூத் தாள் 1 தேக்கரண்டி
 • பாதாம், பிஸ்தா 1 தேக்கரண்டி

வீட்டில் தயாரிக்கப்பட்ட ரசமலாய் செய்வது எப்படி | How to make Homemade Rasmalai in Tamil

 1. பாலை ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் கொதிக்கவைக்கவும். கொதிவந்ததும், எலுமிச்சைச் சாறையும் வெனிகரையும் சேர்க்கவும். திரியும்வரைத் தொடர்ந்து கலக்கவும். பால் கெட்டியாகப் பிரிந்ததும், வடிக்கட்டிக்கொள்ளவும்.
 2. வடிக்கட்டியதும், குளிர்ந்த நீரில் அலசவும், வெனிகர் அல்லது எலுமிச்சைச் சாறு இருந்தால் நீக்குவதற்கு. குறைந்தது 10 நிமிடங்கள் ஆறவைக்க எடுத்துவைக்கவும்.
 3. தண்ணீர் முற்றிலுமாக வடிக்கட்டப்பட்டதும், ஒரு பெரிய தட்டில் சென்னாவை எடுத்து, 2 தேக்கரண்டி சோளமாவைச்சேர்த்து சரியாக 10 நிமிடங்கள் பிசைந்துகொள்ளவும். 10 நிமிடம் மட்டும் பிசைந்ததை உறுதிசெய்துகொள்ளவும். இந்த நிலை மிகவும் முக்கியமானது.
 4. 10 நிமிடங்கள் பிசைந்தபிறகு, சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். இதில் 10 - 16 உருண்டைகள் செய்யலாம்.
 5. உருண்டைகளை உருட்டும்போதும் சர்க்கரைப் பாகைத் தயாரித்துக்கொள்ளவும். கொதிக்கட்டும். சர்க்கரைப் பாகு கொதித்ததும், சென்னா உருண்டையகளைச்சேர்த்து 20-25 நிமிடங்கள் அல்லது உருண்டைகள் இரட்டிப்பாகும்வரை வேகவைக்கவும்.
 6. இதற்கிடையில், மசாலா பாலைத் தயாரித்துக்கொள்ளவும். ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில், பாலைக் கொதி நிலைக்குச் சூடுபடுத்திக்கொள்ளவும். குங்குமப்பூ, ஏலக்காய், பாதாம், பிஸ்தா ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். 20 நிமிடம் கொதிக்க வைக்கவும் அல்லது பால் கெட்டியாகும் வரை கொதிக்கவைக்கவும்.
 7. அடுப்பிலிருந்து எடுத்து, சென்னா உருண்டைகளைப் பிழிந்து அவற்றை பாலில் போடவும். கலக்கவேண்டாம். இவை மென்மையானவை.
 8. சில்லென்று பரிமாறவும்.

எனது டிப்:

கடலை மாவைச் சர்க்கரைப் பாகில் 25 நிமிடங்கள் கொதிக்கவைத்தபின், ஒரு உருண்டை எடுத்து குளிர்ந்த நீரில் போடவும். மூழ்கினால் வெந்துவிட்டது என்று பொருள்.

Reviews for Homemade Rasmalai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.