வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட ரசமலாய்

Photo of Homemade Rasmalai by Niharika Bhide at BetterButter
412
396
4.9(0)
0

வீட்டில் தயாரிக்கப்பட்ட ரசமலாய்

Mar-06-2017
Niharika Bhide
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • நவ்ரதாஸ்
  • மகாராஷ்டிரம்
  • சிம்மெரிங்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஃப்ரீஸிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சென்னா தயாரிப்பதற்கு-
  2. பால் 500 மிலி
  3. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  4. வெனிகர் 1 தேக்கரண்டி
  5. சோளமாவு 2 தேக்கரண்டி
  6. பாகிற்கு -
  7. சரக்கரை 1 கப்
  8. தண்ணீர் 4 கப்
  9. மசாலா பாலுக்கு-
  10. பால் 300 மிலி
  11. சர்க்கரை 5 தேக்கரண்டி
  12. குங்குமப்பூத் தாள் 1 தேக்கரண்டி
  13. பாதாம், பிஸ்தா 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாலை ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் கொதிக்கவைக்கவும். கொதிவந்ததும், எலுமிச்சைச் சாறையும் வெனிகரையும் சேர்க்கவும். திரியும்வரைத் தொடர்ந்து கலக்கவும். பால் கெட்டியாகப் பிரிந்ததும், வடிக்கட்டிக்கொள்ளவும்.
  2. வடிக்கட்டியதும், குளிர்ந்த நீரில் அலசவும், வெனிகர் அல்லது எலுமிச்சைச் சாறு இருந்தால் நீக்குவதற்கு. குறைந்தது 10 நிமிடங்கள் ஆறவைக்க எடுத்துவைக்கவும்.
  3. தண்ணீர் முற்றிலுமாக வடிக்கட்டப்பட்டதும், ஒரு பெரிய தட்டில் சென்னாவை எடுத்து, 2 தேக்கரண்டி சோளமாவைச்சேர்த்து சரியாக 10 நிமிடங்கள் பிசைந்துகொள்ளவும். 10 நிமிடம் மட்டும் பிசைந்ததை உறுதிசெய்துகொள்ளவும். இந்த நிலை மிகவும் முக்கியமானது.
  4. 10 நிமிடங்கள் பிசைந்தபிறகு, சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். இதில் 10 - 16 உருண்டைகள் செய்யலாம்.
  5. உருண்டைகளை உருட்டும்போதும் சர்க்கரைப் பாகைத் தயாரித்துக்கொள்ளவும். கொதிக்கட்டும். சர்க்கரைப் பாகு கொதித்ததும், சென்னா உருண்டையகளைச்சேர்த்து 20-25 நிமிடங்கள் அல்லது உருண்டைகள் இரட்டிப்பாகும்வரை வேகவைக்கவும்.
  6. இதற்கிடையில், மசாலா பாலைத் தயாரித்துக்கொள்ளவும். ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில், பாலைக் கொதி நிலைக்குச் சூடுபடுத்திக்கொள்ளவும். குங்குமப்பூ, ஏலக்காய், பாதாம், பிஸ்தா ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். 20 நிமிடம் கொதிக்க வைக்கவும் அல்லது பால் கெட்டியாகும் வரை கொதிக்கவைக்கவும்.
  7. அடுப்பிலிருந்து எடுத்து, சென்னா உருண்டைகளைப் பிழிந்து அவற்றை பாலில் போடவும். கலக்கவேண்டாம். இவை மென்மையானவை.
  8. சில்லென்று பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்