உருளைக்கிழங்கு பீசா | Potato Pizza in Tamil

எழுதியவர் Ishika Thakur  |  9th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Potato Pizza by Ishika Thakur at BetterButter
உருளைக்கிழங்கு பீசாIshika Thakur
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

8306

0

Video for key ingredients

    உருளைக்கிழங்கு பீசா recipe

    உருளைக்கிழங்கு பீசா தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato Pizza in Tamil )

    • பீசா சாஸ் தேவையான அளவு
    • 3 தேக்கரண்டி - துருவில் பதப்படுத்தப்பட்ட வெண்ணெய்
    • சுவைக்கேற்ற உப்பு
    • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
    • 1/2 - பச்சை குடமிளகாய் பொடியாக நறுக்கியது
    • மேலே அலங்கரிப்பதற்கு: 1 - கேரட் துருவல்
    • எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
    • சுவைக்கேற்ற உப்பு
    • 1 தேக்கரண்டி - மூலிகைக் கலவை
    • அடித்தளத்திற்கு: 2 பெரிய உருளைக்கிழங்குகள்

    உருளைக்கிழங்கு பீசா செய்வது எப்படி | How to make Potato Pizza in Tamil

    1. உருளைக்கிழங்கை வேகவைத்து அவை ஆறியதும் தோலை உரித்து மொத்தமான வட்டத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
    2. இந்த உருளைக்கிழங்கு வட்டத் துண்டுகளை கலவை மூலிகை, உப்பு, எலுமிச்சை சாறோடு குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் மேரினேட் செய்யவும்.
    3. ஒரு நான் ஸ்டிக் கடாயில் அல்லது தவாவில் சிறிது எண்ணெய் தடவி வறுத்துக்கொள்ளவும். இரண்டு பக்கமும் சிறு தீயில் சற்றே வறுத்துக்கொள்ளவும்.
    4. ஒரு தனி பாத்திரத்தில் அனைத்து டாப்பிங் பொருள்களையும், வெண்ணெயைத் தவிர கலந்துகொள்ளவும். காய்கறிகள் வேகும்வரை சிறிது எண்ணெயை கடாயில் ஊற்றி வதக்கவும்.
    5. பீசா தயாரிப்பதற்கு. வறுத்த உருளைக்கிழங்கு வட்டவடிவத் துண்டுகளில் டாப்பிங் கலவையை வைத்து மூடி 5 நிமிடங்கள் வேகவைக்கவும். அதன்பின்னர் திறந்து தட்டையான ஒரு கரண்டியால் டாப்பிங்கை மெதுவாக அழுத்தவும். அது முறையாக ஒட்டவேண்டும்.
    6. துருவிய வெண்ணெயை ஒவ்வொன்றிலும் தூவி மீண்டும் மூடி 2 நிமிடங்களுக்கு அல்லது வெண்ணெய் உருகும்வரை சமைக்கவும். இது இப்போது பரிமாறத் தயார்.
    7. டிபினுக்கு ஒரு நேர்த்தியான சிற்றுண்டி.

    எனது டிப்:

    முறுமுறுப்பான உருளைக்கிழங்கு அடித்தளத்தினால் சொதசொதப்பாக மாறாது.

    Reviews for Potato Pizza in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.