பூரணம் வைக்கப்பட்ட கல்ச்சா சன்னா | Stuffed kulcha chana in Tamil

எழுதியவர் Sandeep Saini  |  9th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Stuffed kulcha chana recipe in Tamil,பூரணம் வைக்கப்பட்ட கல்ச்சா சன்னா, Sandeep Saini
பூரணம் வைக்கப்பட்ட கல்ச்சா சன்னாSandeep Saini
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2938

0

பூரணம் வைக்கப்பட்ட கல்ச்சா சன்னா recipe

பூரணம் வைக்கப்பட்ட கல்ச்சா சன்னா தேவையான பொருட்கள் ( Ingredients to make Stuffed kulcha chana in Tamil )

  • ரெடிமேட் கல்சா - 6
  • வேகவைத்த கருப்பு உளுந்து - 1 கப்
  • தக்காளி சாந்து - 1/2 கப்
  • வெங்காயம் நறுக்கப்பட்டது - 1
  • பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் நறுக்கப்பட்டது - 2
  • கொத்துமல்லி இலைகள் நறுக்கப்பட்டது - 1 தேக்கரண்டி
  • தக்காளி நறுக்கப்பட்டது - 1
  • சாட் மசாலா - 1 தேக்கரண்டி
  • கருப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  • வறுத்த சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  • புளி விழுது - 1 தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்ற அளவு
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி

பூரணம் வைக்கப்பட்ட கல்ச்சா சன்னா செய்வது எப்படி | How to make Stuffed kulcha chana in Tamil

  1. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி பூண்டு விழுதை அதனுடன் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  2. தக்காளி சாந்தைச் சேர்த்து சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  3. உப்பு, வேகவைத்த கருப்பு உளுந்து, சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்க்கவும். கலவை உலர்ந்து கடலை நன்றாக மசலாவுடன் கலந்திருக்கும்வரை கலந்து வேகவைக்கவும். ஆறுவதற்காக எடுத்து வைக்கவும்.
  4. இதற்கிடையில் ஒரு தட்டையானக் கடாய்/கிர்டில்/தவாவில் எடுத்து கல்சாவில் இரு பக்கங்களும் வேகும்வரை வரை சூடுபடுத்த மீத முள்ள எண்ணெயைப் பயன்படுத்தவும்.
  5. இப்போது கருப்பு உப்பு, சாட் மசாலா, வறுத்த சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்துமல்லி, எலுமிச்சைச் சாற்றை கலவையில் கலக்கவும்.
  6. அனைத்துக் கல்சாவிலும் ஒரு சிறு கீறல் கீறி இந்தக் கலவையை அதனுள் நிரப்பவும்.

Reviews for Stuffed kulcha chana in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.