சாம்பார் | Sambhar in Tamil

எழுதியவர் Manisha Goyal  |  12th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Sambhar by Manisha Goyal at BetterButter
சாம்பார்Manisha Goyal
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

1478

0

Video for key ingredients

  சாம்பார் recipe

  சாம்பார் தேவையான பொருட்கள் ( Ingredients to make Sambhar in Tamil )

  • நன்றாக நறுக்கப்பட்ட தேங்காய் ( உங்கள் விருப்பம்)
  • 1 & 1/2 தேக்கரண்டி - சாம்பார் மசாலா
  • தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
  • கப் - நறுக்கப்பட்ட வெங்காயம்
  • கப் - நறுக்கப்பட்ட தக்காளி
  • தேக்கரண்டி - இஞ்சி திருவப்பட்டது
  • 12ல் இருந்து 15 - கறிவேப்பிலை
  • தேக்கரண்டி - எவரெஸ்ட் பெருங்காயம்
  • 1 தேக்கரண்டி - கடுகு
  • 3 - காய்ந்த மிளகாய்
  • தாளிப்புக்கு: 3 தேக்கரண்டி - எண்ணெய்
  • தண்ணீர் - 2.5 கப்
  • உப்பு சுவைக்கு
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • புதிய புளி சாறு - 1 தேக்கரண்டி
  • நறுக்கப்பட்ட காய்கறிகளைக் கலந்துகொள்ளவும்- 1 கப்
  • கடலைப் பருப்பு (30 நிமிடங்கள் ஊறவைத்தது) - 1 கப்

  சாம்பார் செய்வது எப்படி | How to make Sambhar in Tamil

  1. பருப்பை 30 நிமிடங்களுக்கு ஊறுவைத்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு பிரஷர் குக்கரில், பருப்பு, நறுக்கப்பட்ட காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து, 5-6 விசில்களுக்கு நடுத்தர தீயில் சமைக்கவும்.
  3. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்ளவும். கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
  4. இப்போது வெங்காயம், இஞ்சி சேர்த்து பிங் நிறம் வரும்வரை வதக்கவும். தக்காளி சேர்த்துக்கொள்ளவும். பசையாகும்வரை வேகட்டும். பிரஷர் குக்கரில் வேகவைத்த பருப்பைச் சேர்க்கவும்.
  5. சாம்பார் மசாலா, மிளகாய்த்தூள், புளி சாறு சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. தேவையான பதத்திற்காக போதுமான தண்ணீர் சேர்க்கவும். 10 நிமிடங்களுக்கு சமைத்து, நன்றாகக் கலந்துகொள்ளவும். நறுக்கப்பட்ட தேங்காயைச் சேர்த்துக்கொள்க.
  7. ஆவி பறக்கும் சாதம், இட்லி, தோசையும் சூடாகப் பரிமாறவும்.

  எனது டிப்:

  பார்வைக்குப் பட்டால் எனது குழந்தைகள் பருப்பிலிருந்து காய்கறிகளை எடுத்துக்கொள்வதற்காக சன்னமாக நறுக்கிக்கொண்டேன். உங்கள் விருப்பத்திற்கேற்ப மசாலாக்களை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். 3-4 தேக்கரண்டி தேங்காய் சட்னியை கடைசி நேரத்தில் சாம்பாரில் சேர்த்துக்கொள்ளவும், அது சுவையை வேறு நிலைக்குக் கொண்டுசெல்லும். இது ஒரு உத்திரவாதமான சமையல் குறிப்பல்ல. இது என் அம்மா இத்தனை வருடங்களாகச் செய்துவரும் முறை, நான் அதை விரும்புகிறேன்.

  Reviews for Sambhar in tamil (0)