எலுமிச்சை சாதம் | Lemon Rice in Tamil

எழுதியவர் Krithika Chandrasekaran  |  15th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Lemon Rice by Krithika Chandrasekaran at BetterButter
எலுமிச்சை சாதம்Krithika Chandrasekaran
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

208

0

எலுமிச்சை சாதம் recipe

எலுமிச்சை சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Lemon Rice in Tamil )

  • உப்பு சுவைக்காக
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • 1 எலுமிச்சையின் சாறு
  • பச்சமிளகாய் - 1 பெரியது
  • வறுத்த மணிலாபயிர் (விருப்பம்சார்ந்தது) - 1/4 கப்
  • பட்டாணிகள் -1/4 கப்
  • நன்றாக நறுக்கப்பட்டக் காய்கறிகள் (கேரட் மற்றும் குடமிளகாய்) - 1/2 கப்
  • அரிசி - 1/2 கப்

எலுமிச்சை சாதம் செய்வது எப்படி | How to make Lemon Rice in Tamil

  1. கழுவப்பட்ட அரிசை 1 கப் தண்ணீர்விட்டு பிரஷர் குக்கரில் கொதிக்கவிடவும். அதிகம் வெந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். செய்ததும், ஒரு தட்டில் முள்கரண்டியால் மெல்ல பரவவிட்டு, அறையின் வெப்பத்தில் ஆறவிடவும்.
  2. ஒரு வானலியில் எண்ணெயை சூடுபடத்தி, கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். அடுத்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
  3. இப்போது காய்கறிகளை மஞ்சள் தூள் உப்புடன் சேர்த்து போடவும், அதன் 3/4 பகுதி வேகும்வரை சமைக்கவும். மணிலா பயிரையும் சேர்த்துக்கொள்ளவும்.
  4. காய்கறிகள் வெந்ததும், அரிசியை சேர்க்கவும். எலுமிச்சை சாறையும் சேர்த்து முள் கரண்டியால் மெல்ல அரிசியுடன் இவற்றை எல்லாம் சரிசமமாகும்வரை கலக்கவும். உப்பு பதம் பார்க்கவும்.
  5. உங்கள் வேண்டுமென்றால் நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்கரிக்கவும். பரிமாறுவதற்கு முன் சாதத்தைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.

எனது டிப்:

எளிமையான சுவையிலிருந்து, காய்கறி, மணிலாபயிர் மற்றும் இன்னும்பல எண்ணற்ற வகைகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.

Reviews for Lemon Rice in tamil (0)