வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சாதம்

Photo of Lemon Rice by Krithika Chandrasekaran at BetterButter
1130
61
5.0(0)
0

எலுமிச்சை சாதம்

Oct-15-2015
Krithika Chandrasekaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி - 1/2 கப்
  2. நன்றாக நறுக்கப்பட்டக் காய்கறிகள் (கேரட் மற்றும் குடமிளகாய்) - 1/2 கப்
  3. பட்டாணிகள் -1/4 கப்
  4. வறுத்த மணிலாபயிர் (விருப்பம்சார்ந்தது) - 1/4 கப்
  5. பச்சமிளகாய் - 1 பெரியது
  6. 1 எலுமிச்சையின் சாறு
  7. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  8. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  10. கடுகு - 1/2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - கொஞ்சம்
  12. உப்பு சுவைக்காக

வழிமுறைகள்

  1. கழுவப்பட்ட அரிசை 1 கப் தண்ணீர்விட்டு பிரஷர் குக்கரில் கொதிக்கவிடவும். அதிகம் வெந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். செய்ததும், ஒரு தட்டில் முள்கரண்டியால் மெல்ல பரவவிட்டு, அறையின் வெப்பத்தில் ஆறவிடவும்.
  2. ஒரு வானலியில் எண்ணெயை சூடுபடத்தி, கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். அடுத்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
  3. இப்போது காய்கறிகளை மஞ்சள் தூள் உப்புடன் சேர்த்து போடவும், அதன் 3/4 பகுதி வேகும்வரை சமைக்கவும். மணிலா பயிரையும் சேர்த்துக்கொள்ளவும்.
  4. காய்கறிகள் வெந்ததும், அரிசியை சேர்க்கவும். எலுமிச்சை சாறையும் சேர்த்து முள் கரண்டியால் மெல்ல அரிசியுடன் இவற்றை எல்லாம் சரிசமமாகும்வரை கலக்கவும். உப்பு பதம் பார்க்கவும்.
  5. உங்கள் வேண்டுமென்றால் நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்கரிக்கவும். பரிமாறுவதற்கு முன் சாதத்தைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்