பணியாரம் | Paniyaram in Tamil

எழுதியவர் Aameena Ahmed  |  21st Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Paniyaram recipe in Tamil,பணியாரம், Aameena Ahmed
பணியாரம்Aameena Ahmed
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

872

0

பணியாரம் recipe

பணியாரம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Paniyaram in Tamil )

  • தோசை மாவு 1 கப்
  • வெங்காயம் - 1 நடுத்தர அளவிலானது நன்றாக நறுக்கப்பட்டது
  • பச்சை மிளகாய் - 2 நன்றாக நறுக்கப்பட்டது
  • உப்பு சுவைக்காக
  • நன்றாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி சிறிய கொத்து ஒன்று

பணியாரம் செய்வது எப்படி | How to make Paniyaram in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் தோசை மாவை எடுத்துக்கொள்க. அதனோடு நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. இப்போது பணியார பாத்திரத்தை எடுத்து ஒவ்வொரு பள்ளத்திலும் ஒரு துளி எண்ணெய் விட்டபிறகு ஒவ்வொரு பள்ளத்திலும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
  3. இப்போது இரண்டு மூன்று துளிகள் எண்ணெயை பக்கவாட்டில் விட்டு, காற்று கொப்புளிக்கும்வரை சமைத்து அடுத்தப் பக்கத்தைத் திருப்பிப் போடவும்.
  4. இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும். ஒரு தட்டிற்கு மாற்றி, தேங்காய் சட்டினி அல்லது மணிலாபயிர் சட்டினியுடன் சூடாகப் பரிமாறவும்!

எனது டிப்:

இந்தப் பணியாரங்களைத் தயாரிப்பதற்குச் சிறப்பு பாத்திரத்தை நீங்கள் வாங்கவேண்டும், ஆனால் இதுபோன்ற ருசியான துரித காலை உணவைத் தயாரிப்பதற்கு இதை வாங்குவதற்கு பயனுள்ளது என்று உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இது விரல்களால் உண்ணத்தக்கவை, குழந்தைகள் சாப்பாட்டு பேட்டியில் எடுத்துச்செல்வதற்கு உகந்தது!

Reviews for Paniyaram in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.