ஆம்பூர் சிக்கன் பிரியாணி | Ambur Chicken Biryani in Tamil

எழுதியவர் Jyothi Rajesh  |  22nd Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ambur Chicken Biryani by Jyothi Rajesh at BetterButter
ஆம்பூர் சிக்கன் பிரியாணிJyothi Rajesh
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  3

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1168

0

ஆம்பூர் சிக்கன் பிரியாணி recipe

ஆம்பூர் சிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Ambur Chicken Biryani in Tamil )

 • கோழி 500 கிராம்
 • வெங்காயம் 2 நடுத்தர அளவில் (மெலிதாக வெட்டப்பட்டது)
 • தக்காளி 2 பெரியது (மெலிதாக வெட்டப்பட்டது)
 • இஞ்சி - பூண்டு விழுது 1 & 1/2 தேக்கரண்டி
 • தயிர் 1/4 கப் (கட்டியானது)
 • கொத்துமல்லி, புதினா இலைகள் 2 தேக்கரண்டி (நன்றாக நறுக்கப்பட்டது)
 • கிராம்பு 4
 • இலவங்கப்பட்டைக் குச்சிகள் 2 இன்ச்
 • பே இலைகள் 1 சிறிய இலை
 • ஏலக்காய் 3
 • எண்ணெய் 1/4 கப்
 • உப்பு சுவைக்கு
 • சீரக சம்பா அரிசி 2 கப்
 • தரையில் உலர்த்திய சிவப்பு மிளகாய் 15

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | How to make Ambur Chicken Biryani in Tamil

 1. குறைந்தது 30 நிமிடங்களுக்கு முதலில் சிவப்பு மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து காயவைக்கவும். அதன்பிறகு மிகக்குறைவாக தண்ணீர் விட்டு அதை கெட்டியான சாந்தாக அரைத்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்
 2. கோழியை நன்றாகச் சுத்தப்படுத்திக் கழுவிக்கொள்ளவும்.
 3. சீரகச் சம்பா அரிசையைக் கழுவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
 4. ஒரு பெரிய பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீரை கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிவிட்டதும், 1 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய்விடவும், அதன்பிறகு ஊறவைத்த சீரக அரிசியை சேர்த்துக்கொள்ளவும். 3/4 அளவு வேக வைத்துக்கொள்ளவும்.
 5. சீரக அரிசை அதிகமாகவோ முழுமையாகவே வேகவைக்கவேண்டாம், இது மிகவும் அவசியம். பிரியாணியை டிரம்மில் சமைக்கப்போவதால் அரிசியை நீங்கள் 3/4 அளவு வேக வைக்கவேண்டும். 3/4 அளவு வெந்ததும், தண்ணீரை வடிகட்டிவிட்டு சமைத்த அரிசியை எடுத்து வைத்துக்கொள்க.
 6. பள்ளமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்ளவும் (நான் பிரஷர் குக்கர் பயன்படுத்தினேன்). ஒரு தேக்கரண்டி தயிரைச்சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். கிராம்பு, இலவங்கப்பட்டை, பே இலை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
 7. 2 தேக்கரண்டி நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து கலந்துகொள்க. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து சாந்தின் பச்சை போகும்வரை வதக்கவும்.
 8. கோழியைச் சேர்த்து கோழியின் நிறும் வெள்ளையாகும்வரை சமைக்கவும்.
 9. அதன்பின் 1 தேக்கரண்டி நறுக்கப்பட்ட கொத்துமல்லி, புதினா இலைகளைச்சேர்த்து கலந்துகொள்க.
 10. நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளியைச்சேர்த்து தக்காளி மிருதுவாகும்வரை சமைக்கவும்.
 11. அரைத்த சிவப்பு மிளகாய்ச் சாந்து, சுவைக்கேற்ற உப்பைச் சேர்த்து கலக்கி நடுத்தர தீயில் மேலும் 5 நிமிடங்களுக்குச் சமைக்கவும்.
 12. மீதமுள்ள தயிரையும் சேர்த்து கலந்துகொள்ளவும். அதை மேலும் 2 நிமிடங்கள் வேகட்டும்.
 13. இதற்குள் கோழி 3/4 பங்கு வெந்திருக்கவேண்டும். இப்போது அடிப்பாகத்திற்குச்சென்றிருக்கும், பிரியாணியை டிரம்மில் போடவும்.
 14. பல அடுக்குகள் எனக்கு வேண்டும் என்பதால் அரிசியைச்சேர்ப்பதற்கு முன் சிக்கன் மசாலாக் கலவையில் பாதியை எடுத்துக்கொண்டேன். உங்கள் வேண்டுமென்றால் 1 அடுக்கு மட்டும் செய்துகொள்ளவும்.
 15. சிக்கன் அடுக்கின் மீது சாதத்தில் பாதியைச் சேர்த்து கொத்துமல்லி புதினா இலைகளைத் தூவவும்.
 16. இப்போது நாம் எடுத்து வைத்த சிக்கன் மசாலாவைக் கலந்து இரண்டாவது அடுக்கைச் சேர்க்கவும். முடிந்தளவிற்குச் சமப்படுத்தவும், அதன்பிறகு மீதமுள்ள சாதத்தையும் சேர்த்து கொத்துமல்லி- புதினா இலைகளைத் தூவவும்.
 17. குறைவான வெப்பத்தில் உணவை வைத்து, மூடி ஆவியை உள்ளேயே வைத்துக்கொள்ள கனமானப்பொருள் ஒன்றை தட்டின் மீது வைக்கவும் (இது உத்திரவாதமுள்ள டிரம் இல்லை என்பது எனக்குத் தெரியும், இருந்தாலும் வீட்டில் இது தான் சௌகரியமானது)
 18. பிரியாணி குறைவான வெப்பத்தில் 20 நிமிடங்களுக்கு வேகட்டும்.
 19. அவ்வளவுதான். ஆம்பூர் பிரியாணி ரெடி. சீரக சம்பா அரிசியினால் இது வேறுவிதமான சுவையைக்கொண்டிருக்கும். இந்த பிரியாணியின் தோற்றமும் சுவையும் சப்புக்கொட்டவைக்கும்.
 20. வெங்காய ரைத்தா அவித்த முட்டையுடன் சூடாகப் பரிமாறவும். சொர்க்கம்! :D

எனது டிப்:

ஆம்பூர் பிரியாணியின் உத்திரவதமான சுவையை அனுபவிக்க சீரக சம்பா அரிசியை மட்டும் பயன்படுத்தவும்!

Reviews for Ambur Chicken Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.