பிரெட் புட்டிங் | Bread Pudding in Tamil

எழுதியவர் Sharon Dcosta  |  22nd Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Bread Pudding by Sharon Dcosta at BetterButter
பிரெட் புட்டிங்Sharon Dcosta
  • ஆயத்த நேரம்

    40

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

2005

0

பிரெட் புட்டிங் recipe

பிரெட் புட்டிங் தேவையான பொருட்கள் ( Ingredients to make Bread Pudding in Tamil )

  • 6 பிரெட் லொஃப்கள்
  • 1 முட்டை
  • 6 தேக்கரண்டி - சர்க்கரை
  • 3 கப் - பால்
  • 4-5 துளிகள் - வெண்ணிலா எசென்ஸ்

பிரெட் புட்டிங் செய்வது எப்படி | How to make Bread Pudding in Tamil

  1. 5 இன்ச் விட்டமுள்ள ஒரு அலுமினிய பேக்கிங் டின்னில் 1 தேக்கரண்டி சர்க்கரை எடுத்து சர்க்கரை உருகும்வரை அடுப்பில் சூடுபடுத்தவும்.
  2. சர்க்கரை கேரமலைஸ் ஆகும்வரை சூடுபடுத்திக்கொண்டே இருக்கவும் (பழுப்பு நிறத்தில் மாறும்) டின்னின் அடிப்பாகம் முழுவதும் பரப்புக. ஆறவிடுக.
  3. பிரெட்டின் கடின மேல் பகுதியை நீக்கி சிறுசிறு துண்டுகளாக கிழித்துக்கொள்க.
  4. ஒரு கிண்ணத்தில் பால், முட்டை, மீதமுள்ள சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ ஆகியவற்றைக் கலந்துகொள்க. பிரட் துண்டுகளை இந்தக் கலவையில் அரை மணி நேரத்திற்கு உறவைக்கவும்.
  5. ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்துகொள்க, அப்போதுதான் கட்டிகள் இருக்காது. தயாரித்து வைத்துள்ள டின்னில் கலவையை ஊற்றுக.
  6. ஒரு பிரஷர் குக்கரில் கிட்டத்தட்ட 1 இன்ச் அளவு தண்ணீர் நிரப்பு பேக்கிங் டின்னை அதன் மீது வைக்கவும். டின்னை ஒரு மூடியால் மூடி அதன் மேல் கணம் வைக்கவும். (பெரிய கல் நன்றாக இருக்கும்)
  7. 3 விசில்களுக்கு வேகவைத்து தீயை அடக்கி, பிரஷர் குக்கரில் 8-10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  8. எடுத்து சில்லென்று பரிமாறவும்.

எனது டிப்:

நாட்பட்டப்பாணும் நல்லது; வெளியில் எடுக்க, புட்டிங்கிற்கும் டின்னும் இடையில் கத்தியை நுழைக்கவும். புட்டிங்கைச் சுற்றி கத்தியைச் சுற்றவும். தட்டை மூடி தலைகீழாகத் திருப்பவும்.

Reviews for Bread Pudding in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.