வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மேமோ - வேகவைத்து வானலியில் வறுத்தது

Photo of Chicken Momo - Steamed & Pan Fried by Prachi Pawar at BetterButter
7253
72
4.7(0)
0

சிக்கன் மேமோ - வேகவைத்து வானலியில் வறுத்தது

Jul-20-2015
Prachi Pawar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • பான் ஆசியன்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாவுக்கு:
  2. மைதா - 1 கப்
  3. தண்ணீர் - தேவையான அளவு
  4. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. பூரணத்திற்கு:
  7. நசுக்கிய சிக்கன் - 1/2 கிலோ
  8. வெங்காயம் - 2 மிகவும் பொடியாக நறுக்கியது
  9. இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  10. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
  11. பச்சை மிளகாய் சாஸ் - 2 தேக்கரண்டி
  12. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  13. தக்காளி கெச்சப் - 1 தேக்கரண்டி
  14. உப்பு - 1/2 தேக்கரண்டி
  15. சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
  16. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  17. வானியில் வறுக்கும் வகைக்கு:
  18. ஷேஷ்வான் சாஸ் - 3 தேக்கரண்டி [நான் சிங்க்ஸ் ஷேஷ்வான் சாஸ் வாங்கினேன்]
  19. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில், மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்தபடி மென்மையான பந்தாக மாறும்வரை பிசைந்து எடுத்து வைக்கவும்.
  2. நசுக்கிய சிக்கனை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்தவும். ஒரு வானலியை எடுத்து எண்ணெய் சேர்த்து உயர் தீயில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அவை பளபளப்பாக மாறும் வரை வறுக்கவும். நசுககியச் சிக்கனை போட்டு நன்றாகக் கலந்துகொள்க.
  3. உயர் தீயில் சமைப்பதால், கவனமாக இருக்கவும். சிக்கன் பாதி வெந்ததும், சோயா சாஸ், பச்சை மிளகாய் சாந்து, மிளகுச் சாந்து, தக்காளி கெச்சப் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. நாம் நசுக்கிய சிக்கனைப் பயன்படுத்துவதால் வேகமாக வெந்துவிடும். வெந்ததும், உப்பு சர்க்கரையில் கலந்துகொள்ளவும். தீயை நிறுத்திவிட்டு பூரணம் வைக்கும்வரை ஆறவிடவும்.
  5. இப்போது முக்கியமானப் பகுதி வந்துவிட்டது. மாவை மெலிதாக பெரிய வட்டமாக உருட்டிக்கொள்க. ஒரு பெரிய மூடி அல்லது வட்டவடிவ பிஸ்கட் வெட்டியால் மாவை வட்டவடிவில் வெட்டிக்கொள்க.
  6. ஒவ்வொரு வட்டத்தின் விளிம்பிலும் கொஞ்சம் தண்ணீர் தடவி பூரணத்தை நிரப்பவும். விளிம்புகளை மடித்து மையத்துக்கு ஒன்றுகூட்டவும், மடிப்புகள் செய்து. பூரணத்தை உள்ளே தங்கவைப்பதற்கு மடிப்புகளை அழுத்தித் திருப்பவும்.
  7. இந்த மோமோக்களை வேகவைக்க அரிசி வேகவைக்கும் கூடையைப் பயன்படுத்தினேன். அரிசி வேகவைக்கும் கூடையில் எண்ணெய் தடவி அரிசி குக்கரில் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். மெதுவாக கவனமாக மூடி, 10.15 நிமிடங்கள் வேகவைக்கவும். உங்களுக்கு விருப்பமான சாசுடன் சூடாகப் பரிமாறவும்.
  8. இவற்றை ஒரு வானலியில் உயர் தீயில் வறுப்பதற்கு, வானலியையும் வைத்து எண்ணெயைச் சேர்க்கவும். வேகவைத்த மெமோவை மெதுவாக வைத்து சமமாக வேகுவதற்கு கவனமாகத் திருப்பவும்.
  9. மெமோவில் சமமாக பூசப்படுவதற்கு வீட்டில் தயாரித்த/கடையில் வாங்கிய ஷேஷ்வான் சாசைச் சேர்த்து கலக்கவும். கொத்துமல்லியால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்