வீடு / சமையல் குறிப்பு / வெஜி புலாவ்

Photo of Veggie Pulao by Sujata Limbu at BetterButter
1869
197
4.3(0)
0

வெஜி புலாவ்

Oct-26-2015
Sujata Limbu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • முகலாய்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 200 கிராம் பாஸ்மதி அரிசி ஊறவைத்தது
  2. 1 கப் காய்கறி கலவை (பிரெஞ்ச் பீன்ஸ், கேரட், பட்டாணி)
  3. 1/2 தேக்கரண்டி சீரகம்
  4. 1 ஏலக்காய்
  5. 1 பிரிஞ்சி இலை
  6. 1 கிராம்பு
  7. 1 சிறிய இலவங்கப்பட்டை குச்சி
  8. 1/2 தேக்கரண்டி பூண்டு விழுது
  9. 1/2 தேக்கரண்டி இஞ்சி விழுது
  10. 1 தேக்கரண்டி நெய்
  11. 1 தேக்கரண்டி எண்ணெய்
  12. 1 வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  13. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு பிரஷர் குக்கரை எடுத்து எண்ணெயையும் நெய்யையும் ஒன்றாக அதில் போட்டு சூடுபடுத்தவும். கிராம்பு, சீரகம், எலக்காய், இலவங்கப்பட்டை, பிரிஞ்சி இலை சேர்க்கவும். 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் வதக்கி சமைக்கவும்.
  2. அடுத்து, வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது சேர்க்கவும். மேலும் ஒரு நிமிடத்திற்கு மிதமானச் சூட்டில் வதக்கிச் சமைக்கவும்.
  3. அதன்பின் நறுக்கிய காய்கறிக் கலவையோடு உப்பு, ஊறவைத்த அரிசியைப் போடவும். இந்தக் கலவையை மேலும் 1-2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. 2 கப் வெந்நீர் ஊற்றி நன்றாக ஒரு கலக்கு கலக்கவும். இது மிதமானச் சூட்டில் 2-3 விசில்களுக்கு வேகட்டும்.
  5. சைவ அல்லது அசைவ குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்