வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குழம்பு

Photo of Mutton Curry by Viral Patel at BetterButter
3757
176
4.4(0)
0

மட்டன் குழம்பு

Oct-27-2015
Viral Patel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஜம்மு காஷ்மீர்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கிலோ மட்டன் துண்டுகளாக வெட்டியது
  2. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  3. 2 டீக்கரண்டி கொத்தமல்லித் தூள்
  4. 1 டீக்கரண்டி கரம் மசாலா
  5. 2 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  6. 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி
  7. 6-8 பச்சை மிளகாய் நறுக்கியது
  8. இலவங்கம் பட்டை
  9. கிராம்பு
  10. 2-3 துண்டுகள் இலவங்க இலை
  11. கருப்பு ஏலக்காய்
  12. 1 தேக்கரண்டி பூண்டு விழுது
  13. 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
  14. 4 பெரிய வெங்காயம் நன்றாக நறுக்கியது
  15. 4 தக்காளி நறுக்கியது
  16. 1/2 கப் தயிர்
  17. புதிதாக அரைத்த பச்சை ஏலக்காய் தூள்
  18. சுவைககேற்ப உப்பு
  19. 6 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. மட்டன் துண்டுகளை கழுவி உலர்த்திக் கொள்ளளவும். இறைச்சியுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் மற்றும் 1 டீக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். பின்பு ஒரு சிட்டிகை கரம் மசாலா சேர்க்கவும். சுமார் 1 மணி நேரம் அதை ஊறவைக்கவும்.
  2. 3 தேக்கரண்டி எண்ணெய்யை குக்கரில் விடவும், மசாலாப் பொருட்களையும் சேர்க்கவும் - பிரிஞ்ஜி இலை, முழு கருப்பு ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்த்து உடனடியாக இறைச்சியை கிளறிவிடவும். அந்த மட்டனை நன்றாக வறுத்துக் கொள்ளவும். இதற்கு 10 நிமிடம் தேவைப்படும். இதை மற்றொரு ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக் கொள்ளவும்.
  3. அதே குக்கரில் 3 தேக்கரண்டி எண்ணெய்யை சூடுசெய்து வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் மற்றும் தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும் எண்ணெய் மசாலாவை விட்டு பிரியும்.
  4. இப்போது வறுத்த மட்டனை குக்கரில் சேர்த்து வேகவிடவும், 1 கப் தண்ணீர் சேர்த்து அதற்கு ஏற்றவாறு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். குக்கரை மூடி 20 நிமிடம் வேகவிடவும். பரிமாறுவதற்கு முன்பு புதிதாக அரைத்த பச்சை ஏலக்காய் தூள் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவிக் கொள்ளவும்.
  5. ரொட்டி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம் அல்லது பிரட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்