கலவைக் காய்கறி புலாவ் | Mix vegetable pulao/pilaf in Tamil

எழுதியவர் Nusrath Jahan  |  1st Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mix vegetable pulao/pilaf by Nusrath Jahan at BetterButter
கலவைக் காய்கறி புலாவ்Nusrath Jahan
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1729

0

கலவைக் காய்கறி புலாவ் recipe

கலவைக் காய்கறி புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mix vegetable pulao/pilaf in Tamil )

 • 2 கப் /250 கிராம் = பாஸ்மதி அரிசி
 • 1/4 கப் - கேரட்
 • 1/4 கப் - பட்டாணி
 • 1/4 கப் -குடமிளகாய்
 • 1 - வெங்காயம்
 • 1 - தக்காளி (சிறியது)
 • 2 - பச்சை ஏலக்காய்
 • 2 - கிராம்பு
 • 1 இன்ச் - இலவங்கப்பட்டை
 • 4 தேக்கரண்டி - எண்ணெய்
 • 3 தேக்கரண்டி - கொத்துமல்லி
 • 1 தேக்கரண்டி - இஞ்சி பூண்டு விழுது
 • 1 தேக்கரண்டி - புதினா
 • 1/4 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
 • சுவைக்கேற்ற உப்பு

கலவைக் காய்கறி புலாவ் செய்வது எப்படி | How to make Mix vegetable pulao/pilaf in Tamil

 1. அரிசியைக் கழுவி 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். அனைத்துக் காய்கறிகளையும் நறுக்கி எடுத்து வைக்கவும்.
 2. இதற்கிடையில் 4 கப் தண்ணீர் வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
 3. ஆழமான சாஸ் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி வெங்காயம் மசாலாக்கள் முழுவதையும் போட்டு பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும்.
 4. இஞ்சிப் பூண்டு விழுது தக்காளி சேர்த்து தக்காளி மிருதுவாகி கூழாகும்வரை வேகவைக்கவும்.
 5. மீதமுள்ள எல்லா மசாலாக்களையும் காய்கறிகளையும் சேர்த்து 1 நிமிடத்திற்கு வேகவைக்கவும். இப்போது காய்கறிகளோடு வெந்நீர் சேர்க்கவும்.
 6. ஊறவைத்த அரிசியிலிருந்து தண்ணீரை வடிக்கட்டிவிட்டு காய்கறித் தண்ணீரில் சேர்க்கவும். உப்பு, புதினா கொத்துமல்லி இலைகள் சேர்க்கவு்.
 7. மூடியிட்டு மிதமானச் சூட்டில் அரிசி 3/4 அளவிற்கு வேகும் வரை வேகவைக்கவும். தீயை குறைத்துவிட்டு, மூடியிட்டு தம்மில் ஆவி வெளியேறும்வரை வைக்கவும், சாதம் ஏறக்குறைத் தயாராகிவிட்டது.
 8. உங்களுக்குப் பிடித்த குழம்பு அல்லது ஊறுகாயுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

சேர்ப்பதற்கு முன் அரிசியை வடிக்கட்டிவிடவும், இல்லையேல் சாதம் குழைந்துவிடும். உங்களுக்கு விருப்பமானக் காய்கறிகளை நீங்கள் பயன்படுத்தலாம். வழிமுறை 4 சமையலைத் துரிதப்படுத்துவதற்காக மட்டுமே, தண்ணீரை நேரடியாகச் சேர்த்துக் கொதி நிலைக்குக் கொண்டுவரலாம். தம்மில் வைப்பதற்கு முன், அரிசி முழுமையாக வேகாத நிலையில் இருக்கவேண்டும் இல்லையேல் சாதம் குழைந்துவிடும். காய்கறிகளை அதிகமாக வேகவைக்காதீர்கள், நிறத்தையும் சுவையையும் இழந்துவிடும்.

Reviews for Mix vegetable pulao/pilaf in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.