வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழ தம் பிரியாணி

Photo of Jackfruit/kathal dum biryani by Nusrath Jahan at BetterButter
14491
229
4.4(0)
0

பலாப்பழ தம் பிரியாணி

Nov-03-2015
Nusrath Jahan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மேரினேட் செய்வதற்கு: 200 கிராம் - பலாப்பழ (துண்டுகள்) விதைகள் நீக்கப்பட்டது
  2. 90 கிராம் - தயிர்
  3. 2 1/2 தேக்கரண்டி - இஞ்சி பூண்டு விழுது
  4. 2 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
  5. 1 தேக்கரண்டி - கரம் மசாலா
  6. 1/2 தேக்கரண்டி - மிளகாய்த் தூள்
  7. 1/4 தேக்கரண்டி - மஞ்சள்த்தூள்
  8. பிரியாணிக்கு: 4 கப் - பாஸ்மதி அரிசி
  9. 11 தேக்கரண்டி - எண்ணெய்
  10. 3 - வெங்காயம் (நடுத்தர அளவு) நறுக்கப்பட்டது
  11. 4 - கிராம்பு, ஏலக்காய் மற்றும் பச்சை மிளகாய்
  12. 2 இன்ச் - இலவங்கப்பட்டை
  13. 2 - பிரிஞ்சி இலை
  14. 1 - நட்சத்திர சோம்பும் கருப்பு ஏலக்காய் ஒன்றும்
  15. கையளவு - கொத்துமல்லி புதினா இலைகள்
  16. ஆரஞ்சி நிறமி சில துளிகள் (விரும்பினால்)
  17. 2 தேக்கரண்டி - நெய்
  18. 10-12 - முந்திரிபருப்பு அலங்கரிப்பதற்காக (விரும்பினால்)
  19. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு சாஸ் பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, சிறிது உப்புடன் துண்டுகளைச் சேர்த்து 10-15 நிமிடங்கள் அவை மிருதுவாகும்வரை வேகவைத்து, தண்ணீர் வடிக்கட்டி ஆறவிடவும்.
  2. மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். டிஷ்யு பேப்பரில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மேரினேட் என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களோடு பலாப்பழத்தை மேரினேட் செய்யவும். அரிசியைக் கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. ஒரு பெரிய சாஸ் பேனில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு ஊறவைத்த அரிசியை உப்போடும் மேலே குறிப்பிட்ட மசாலாக்களில் பாதியைச் சேர்க்கவும். அரிசியை 70%க்கு வேகவைக்கவும். சற்றே கடிக்கும் பதத்தில் இருக்கவேண்டும். அரிசியை வடிக்கட்டவும்.
  5. பெரிய சாஸ் பாத்திரத்தில் வெங்காயத்தை வறுத்த அதே எண்ணெயை எடுத்துக்கொள்ளவும். அடுப்பை நிறுத்திவிட்டு மசாலாக்கள் முழுவதையும், மேரினேட் செய்யப்பட்ட பலாப்பழம், புதினா, கொத்துமல்லி, ஆகியவற்றைச் சேர்த்து சமமாகப் பரவச் செய்யவும்.
  6. இப்போது அரிசியைச் சேர்த்து பரவச் செய்து, நெய் சேர்த்து ஆரஞ்சு நிறமியைத் தெளிக்கவும். பாத்திரத்தை அலுமினிய ஃபாயிலால் மூடி சிறு தீயில் தம்மில் 25 நிமிடங்கள் வைக்கவும்.
  7. உங்களுக்குப் பிடித்தவோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்