ஹைத்ராபாத் சிக்கன் பிரியாணி | Hyderabadi Chicken Biryani in Tamil

எழுதியவர் Biryani Art  |  6th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Hyderabadi Chicken Biryani by Biryani Art at BetterButter
ஹைத்ராபாத் சிக்கன் பிரியாணிBiryani Art
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

3044

0

ஹைத்ராபாத் சிக்கன் பிரியாணி recipe

ஹைத்ராபாத் சிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Hyderabadi Chicken Biryani in Tamil )

 • பிரியாணி மசாலா 1 தேக்கரண்டி
 • குங்குமப்பூ 01 கிராம்
 • பிளந்த பச்சை மிளகாய் 20 கிராம்
 • இஞ்சிப்பூண்டு விழுது 25 கிராம்
 • எலுமிச்சை சாறு 25 மிலி
 • நறுக்கப்பட்ட கொத்துமல்லி 10 கிராம்
 • புதினா 10 கிராம்
 • மேரினேட் செய்வதற்கு: தயிர் 250 கிராம்
 • சிவப்பு மிளகாய் 05 கிராம்
 • மஞ்சள் மிளகாய் 05 கிராம்
 • ஷாகி சீரகம் 05 கிராம்
 • பச்சை ஏலக்காய் 05 கிராம்
 • இலவங்கப்பட்டை 05 கிராம்
 • நாட்டு நெய் 300 கிராம்
 • பழுப்பு வெங்காயம் 150 கிராம்
 • முழு அரிசி 1 கிலோ
 • சிக்கன் 800 கிராம்
 • பிரியாணி மசாலா 1 தேக்கரண்டி
 • பிளந்த பச்சை மிளகாய் 20 கிராம்
 • இஞ்சிப் பூண்டு விழுது 25 கிராம்
 • எலுமிச்சை சாறு 25 மிலி
 • சிவப்பு மிளகாய் 05 கிராம்
 • மஞ்சள் மிளகாய் 05 கிராம்
 • இலவங்கப்பட்டை 5 கிராம்
 • சிக்கன் 800 கிராம்

ஹைத்ராபாத் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | How to make Hyderabadi Chicken Biryani in Tamil

 1. மேரினேட்செய்வதற்குக் கீழ் வழங்கப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டு சிக்கனை மேரினேட் செய்து குறைந்தது 2 மணி நேரம் எடுத்து வைக்கவும், இரவு முழுவதும் எடுத்து வைப்பது சிறந்தது.
 2. தண்ணீர் தெளிவாக ஓடும்வரை அரிசியைக் கழுவவும். 20ல் இருந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். 2 1/2கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரிசியை வேகவைக்கவும். 1 தேக்கரண்டி எண்ணெய், உலர் மசாலாக்கள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். தண்ணீர் 5 நிமிடங்கள் கொதிக்கட்டும்.
 3. அரிசி வேகும்போது, கனமான ஒரு பாத்திரத்திற்கு மேரினேட் செய்யப்பட்ட சிக்கனை மாற்றி, வறுத்த வெங்காயம், பச்சை மிளகாய், புதினாவில் 1/2, கொத்துமல்லி ஆகியவற்றோடு எண்ணெய் அல்லது உருக்கிய நெய்யை ஊற்றவும். நன்றாகக் கலந்து மேற்பரப்பைச் சமப்படுத்தவும்.
 4. சாதத்தைச் சமமாகப் பரப்பி, வறுத்த வெங்காயம், புதினா, கொத்துமல்லி ஆகியவற்றை சிக்கன் மீது வைக்கவும். ¼ தேக்கரண்டியில் இருந்து ½ தேக்கரண்டி வரை பிரியாணி மசாலா பவுடரைத் தெளிக்கவும்.
 5. அரிசி, கொத்துமல்லி இலைகளை பரவச் செய்யும் வழிமுறையை மீண்டும் செய்து வறுத்த வெங்காயத்தைச் சேர்க்கவும். குங்குமப்பூ பாலை அதன் மீது ஊற்றவும்.
 6. தம்மை பிடித்து வைக்க கேசரோலை அலுமினியத் தாளினால் அல்லது ஒரு துணியினால் மூடவும். மொத்தமான சமையல் துணியால் அலசி அதிகப்படியானத் தண்ணீரை பிழிந்துவிடவும். அது ஈரப்பதத்தோடு இருக்கவேண்டும். இரட்டை அடுக்காகச் செய்துகொள்ளவும். இந்தத் துணியை ரிம்மின் மீது பரவச் செய்து கேசரோலை மூடிபோட்டு முடவும்.
 7. மொத்தமான சூடான தவா மீது வைத்து அடுப்பை மிதமானச் சூட்டில் வைத்துக்கொள்ளவும். கேசரோலின் விட்டம் முழுமைக்கும் தீ பரவும்படி இருக்கவேண்டும். சரியாக 20 நிமிடங்கள் இப்படியே சமைக்கவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு, பார்ப்பதற்கான ஓட்டை இருந்து அதன் வழியாகப் பார்த்தால் ஆவி நிறைந்திருக்கும்.
 8. இப்போது தீயை குறைத்துக்கொள்ளவும் (இந்திய அடுப்புகள் அல்லது பர்னர்களைப் போல, அங்கே தீயானது கொஞ்சமாகத் தான் தவாவைச் சென்றடையும்). இப்படியாக 10ல் இருந்து 15 நிமிடங்கள் சமைக்கவும். ஈரத் துணியில் ஆவி வெளிவருவதை நீங்கள் பார்க்கலாம்.
 9. தீயை நிறுத்திவிட்டு அப்படியே குறைந்தபட்சம் 20ல் இருந்து 30 நிமிடங்கள் விட்டுவைக்கவும். சிக்கன் பிரியாணியை அலங்கரித்துப் பரிமாறவும்.

Reviews for Hyderabadi Chicken Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.