வீடு / சமையல் குறிப்பு / கேரள பாணி பச்சைப் பட்டாணி குழம்பு இடிப்பம் மற்றும் ஆப்பத்திற்கு

Photo of Kerala Style Green Peas Curry For Idiyappam And Appam by Padma Rekha at BetterButter
3881
46
0.0(0)
0

கேரள பாணி பச்சைப் பட்டாணி குழம்பு இடிப்பம் மற்றும் ஆப்பத்திற்கு

Nov-06-2015
Padma Rekha
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உலர்ந்த பச்சைப் பட்டாணி - 1 கப்
  2. வெங்காயம் - 1 பெரிய அளவு, பொடியாக நறுக்கப்பட்டது
  3. சின்ன வெங்காயம் - 6 தோலுரிக்கப்பட்டு நறுக்கியது
  4. இஞ்சி - 1/2 இன்ச் நறுக்கியது
  5. பூண்டு பற்கள் - 4 நறுக்கியது
  6. பச்சை மிளகாய் - 3 இரண்டாகப் பிளக்கப்பட்டது
  7. தக்காளி - 1 சிறிய அளவு பொடியாக நறுக்கப்பட்டது
  8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  9. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  10. தேங்காய் - 1தேக்கரண்டி துருவியது
  11. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  12. தேங்காய் பால் - 2 கப் (அடர்த்தியைச் சரிபார்க்கவும்)
  13. எண்ணெய் - 1 தேக்கரண்டியும் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயும்
  14. கறிவேப்பிலை - 2 கொத்து
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. உலர்த்திய பச்சைப் பட்டாணியைய் கழுவி இரண்டு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடுத்தநாள் ஒரு பிரஷர் குக்கரில் 6 விசில்களுக்கு வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து 1 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்துக. நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து 3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  3. இப்போது மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்த நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். ஒருதேக்கரண்டி தண்ணீரை வேகவைத்த பட்டாணியிலிருந்து எடுத்து மேலும் 3 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
  4. இந்த வேகவைத்த மசாலாவை தேங்காய் பெருஞ்சீரகத்தோடு சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  5. 1 தேக்கரண்டி எண்ணெயை கடாயில் சூடுபடுத்தி அரைத்த மசாலாவைச் சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, சுவைக்கான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். எண்ணெய் பக்கவாட்டிலிருந்து பிரியும்வரை வேகவைக்கவும்.
  6. இப்போது வேகவைத்த பட்டாணி, தேங்காய் பால் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். மிதமானச் சூட்டில் முழுமையாகக் கொதிக்கவிடவும். அதன்பின்னர் வெப்பத்தைக் குறைத்து மூடி மேலும் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. இடியாப்பம், ஆப்பம் அல்லது பரோட்டாவுடன் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்