இந்தூர் அவுல் | Indori Poha in Tamil

எழுதியவர் Padma Rekha  |  6th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Indori Poha by Padma Rekha at BetterButter
இந்தூர் அவுல்Padma Rekha
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    8

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2445

0

இந்தூர் அவுல் recipe

இந்தூர் அவுல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Indori Poha in Tamil )

  • அவுல் (குத்திய அரிசி)- 1 தேக்கரண்டி
  • கருவேப்பிலை- 10
  • வெங்காயம்- 1 சிறிய அளவு, வெட்டப்பட்டது
  • பச்சைமிளகாய்- 3, வெட்டப்பட்டது
  • கருவேப்பிலை- 10
  • எண்ணெய்- 1 தேக்கரண்டி
  • கடுகு- 1 டீக்கரண்டி
  • சீரகம்- 1/2 டீக்கரண்டி
  • வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு- 1 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ப உப்பு
  • மஞ்சள்த்தூள்- 1/4 டீக்கரண்டி
  • பெருங்காயம்-1/4 டீக்கரண்டி

இந்தூர் அவுல் செய்வது எப்படி | How to make Indori Poha in Tamil

  1. அவுலை 2-3 மூன்று முறை கழுவி தண்ணீர் இல்லாமல் உலர்த்தி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  2. வறுவல் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும், அதில் கடுகு சேர்த்துக்கொள்ளவும் அது பொறிந்ததும் பின் சீரகம் மற்றும் வேர்கடலை சேர்த்துக்கொள்ளவும். அவற்றை வருக்கும் போது லேசான பொன்னிறமாக மாறும்.
  3. பின்பு வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதங்கும் வரை வறுக்கவும். அடுத்து பெருங்காயம் சேர்த்து 1 நிமிடம் கிளறி விடவும்.
  4. இப்பொழுது மஞ்சள்தூள் மற்றும் அவுலை சேர்த்து, எலுமிச்சை சேர்த்து அனைத்து பொருக்களும் ஒன்றாக சேரும்படி கிளறி விடவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  5. சேவ் மிச்சரை இதன் மேல் தூவி சூடாக ஜிலேபி, கட்லெட் மற்றும் டீயுடன் பரிமாறவும்.

Reviews for Indori Poha in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.