மைக்ரேவேவ் துரித சிவ்டா | Microwave Quick Chivda in Tamil

எழுதியவர் Pooja Nadkarni  |  6th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Microwave Quick Chivda by Pooja Nadkarni at BetterButter
மைக்ரேவேவ் துரித சிவ்டாPooja Nadkarni
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1375

0

மைக்ரேவேவ் துரித சிவ்டா recipe

மைக்ரேவேவ் துரித சிவ்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Microwave Quick Chivda in Tamil )

 • அடர்த்தியான அவல் - 3 கப்
 • பொடிசெய்யப்பட்ட சர்க்கரை - 1 தேக்கரண்டி
 • பச்சை வேர்கடலை - 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 • எண்ணெய் - 2-3 தேக்கரண்டி
 • உப்பு - 1 தேக்கரண்டி
 • 1 தேக்கரண்டி - கடுகு
 • சீரகம் - 1 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2-3
 • கறிவேப்பிலை - 5-6

மைக்ரேவேவ் துரித சிவ்டா செய்வது எப்படி | How to make Microwave Quick Chivda in Tamil

 1. மைக்ரோவேவில் வைக்கக்கூடிய பாத்திரத்தில் எண்ணெயை 2-3 நிமிடங்கள் சூடுபடுத்தவும். அவற்றில் தாளிப்புப் பொருள்களைச் சேர்த்து மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் அல்லது அனைத்து கடுகும் பொரியும்வரையில் வைக்கவும்.
 2. இப்போது வேர்கடலையைக் கலந்து மைக்ரோவேவில் மீண்டும் 3-4 நிமிடங்கள் வைக்கவும். ஒவ்வொரு நிமிடத்திற்குப் பிறகும் கலக்குக.
 3. பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து மைக்ரோவேவில் சில விநாடிகள் வைக்கவும்.
 4. அவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மைக்ரோவேவில் 3-4 நிமிடங்கள் வைக்கவும். மொறுமொறுப்புத் தன்மையைச் சோதிக்கவும்.
 5. வேறொரு கலவைப் பாத்திரத்தில், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைக் கலந்து சிவ்டாவை அதில் ஊற்றவும். நன்றாகக் கலக்கவும். உங்கள் மொறுமொறுப்பான, துரித உடனடி அவல் சிவ்டா தயார்.

எனது டிப்:

சிவ்டாவை காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமிக்கவும் இல்லையேல் மிருதுவாகிவிடும்.

Reviews for Microwave Quick Chivda in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.