வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்கள்

Photo of Homemade Chocolates by Chandrima Sarkar at BetterButter
2143
164
4.8(0)
0

வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்கள்

Nov-07-2015
Chandrima Sarkar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
30 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • தீபாவளி
  • அமெரிக்கன்
  • பேசிக் ரெசிப்பி
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 30

  1. காம்பவுண்ட் சாக்லேட் - நான் மோர்ட் அடர்நிற காம்பவுண்ட் 400 கிராம் பயன்படுத்தினேன்
  2. உங்களுக்குப் பிடித்த உலர் பழங்கய் பருப்புகள்
  3. சிலிக்கன் சாக்லேட் அச்சு

வழிமுறைகள்

  1. இரட்டை பாய்லரைக் கொண்டு சாக்லேட்டை உருக்கும் முறை. சாக்லேட்டை ஒன்றும்பாதியுமாக நறுக்கவும். சாக்லேட்டை இரட்டை பாய்லரில் உருக்கவும்.
  2. இரட்டை பாய்லர் மேலே ஒரு மூடியுடன் வெந்நீர் உள்ள ஒரு பாத்திரம். சாக்லேட் துண்டுகள் உள்ள பாத்திரத்தினை மூடிக்கு மேல் நீங்கள் வைக்கவேண்டும். மூடியின் உள் பகுதி வெந்நீரைத் தொடக்கூடாது.
  3. மைக்ரோ வேவைப் பயன்படுத்தி சாக்லேட்டை உருக்கும் முறை: மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பாத்திரத்தில் சாக்லேட்டை நறுக்க ஆரம்பித்ததும் வைக்கவும். ஒரு நிமிடத்தில் 60% பவரில் மைக்ரோவேவ் இருக்கவேண்டும். இடையிடையே நிறுத்தி கலக்கிக்கொள்ளவும். அதாவது ஒவ்வொரு 30 விநாடிக்கும் சாக்லேட் உருகும்வரை.
  4. சாக்லேட் தயாரிக்கும் முறை: உங்கள் சிலிக்கான் சாக்லேட் முறையை எடுத்துக்கொள்ளவும். ஒவ்வொரு பள்ளத்தையும் ஒரு சிறிய கரண்டியால் நிரப்ப ஆரம்பிக்கவும். சாதாரண சாக்லேட் செய்ய விரும்பினால் மேற்கொண்டு நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. குழிகளை நிரப்பினால் போதுமானது.
  5. கிச்சன் பலகையில் சாக்லேட் நிரப்பிய குழியை மெதுவாகத் தட்டவும். இந்தச் செயல் மிகவும் அவசியம். இப்படிச் செய்வதால் உங்கள் சாக்லேட் வெளியில் எடுத்தபின்னர் மிருதுவான அமைப்பைப் பெற்றிருக்கும்.
  6. குழிகளின் விளிம்புகளை பேப்பர் நாப்கினால் துண்டால் துடைப்பதால் ஷார்ப்பான விளிம்புள்ள கடை சாக்லேட் போல கிடைக்கும். ஒன்றல்லது இரண்டு மணி நேரத்திற்கு பிரிஜ்ஜில் வைக்கவும்.
  7. இறுகியதும் சாக்லேட்டை எடுத்து வண்ணமயமான சாக்லேட் சுற்றும் தாள்களில் சுற்றிக்கொள்ளவும். காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்துக்கொள்ளவும். குளிர்ச்சியான காய்ந்த இடத்தில் வைக்கவும்.
  8. இந்த சமயத்தில் நான் பழம், பருப்பு சாக்லேட்டுகளைத் தயாரித்தேன். இதற்கு, முதலில் சிலிகான் குழிகளை உருக்கிய சாக்லேட்டைக் கொஞ்சம் நிரப்பினேன். இது எதற்கென்றால் முதலில் சாக்லேட் ஓட்டைத் தயாரிக்கவேண்டும் என்பதற்காக. பிரிஜ்ஜில் 15 நிமிடத்திற்கு வைக்கவும்.
  9. அச்சை எடுத்த, ஒரு துண்டு பருப்பு அல்லது உங்களுக்கு விருப்பமான உலர் பழத்தை பள்ளத்தில் வைக்கவும். இப்போது பள்ளங்கள் முழுமையாகச் சாக்லேட்டால் மூடவும். பிரிஜ்ஜில் வைக்கவும்.
  10. அடுத்தது சாதாரண சாக்லேட்டுகளாக நான் ஏற்கனவே குறிப்பிட்ட செயல்முறை செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்