உருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு | Potato Ragi Murukku in Tamil

எழுதியவர் Priya Suresh  |  7th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Potato Ragi Murukku by Priya Suresh at BetterButter
உருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்குPriya Suresh
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

471

0

உருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு

உருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato Ragi Murukku in Tamil )

 • 2 கப் கேழ்வரகு மாவு
 • 1 கப் கடலை மாவு
 • 2 உருளைக்கிழங்கு (வேகவைத்து நன்றாக மசிக்கப்பட்டது)
 • 2 தேக்கரண்டி வெண்ணெய்
 • 2 தேக்கரண்டி எள்ளு
 • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
 • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
 • உப்பு
 • எண்ணெய் பொரிப்பதற்கு

உருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி | How to make Potato Ragi Murukku in Tamil

 1. சில நிமிடங்களுக்கு கேழ்வரகு மாவை காயவைத்து வறுத்துக்கொள்ளவும், கேழ்வரகு மாவையும் கடலை மாவையும் ஒன்றாகச் சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்க.
 2. இப்போது வெண்ணெய், மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, எள்ளு, சிவப்பு மிளகாய்த்தூளை மாவுடன் சேர்த்து போதுமானத் தண்ணீர் விட்டு மிருதுவான மாவாகப் பிசைந்துகொள்ளவும்.
 3. ஆழ்ந்து வறுப்பதற்கு எண்ணெயை சூடுபடுத்தி, மாவு பந்து ஒன்றை எடுத்து முறுக்கு அச்சில் போடவும். எண்ணெய் தடவப்பட்ட தட்டின் மீது முறுக்கைப் பிழிந்து சூடான எண்ணெயில் மெல்ல போடவும், எண்ணெயில் கொப்பளிப்பது நிற்கும்வரை பொரிக்கவும்.
 4. ஒரு பேப்பர் துண்டில் அதிகப்படியான எண்ணெயை வடிக்கட்டவும். ஒரு காற்றுப்புகாத கொள்கலனில் சேமித்துக் கொள்ளவும்.
 5. இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இந்த முறுக்குகள் மொறுமொறுப்பாக இருக்கும்.

Reviews for Potato Ragi Murukku in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.