வீடு / சமையல் குறிப்பு / இனிப்புச் சீடை

Photo of Sweet seedai by Subha Prakash at BetterButter
1904
15
5.0(0)
0

இனிப்புச் சீடை

Nov-10-2015
Subha Prakash
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு - 1 கப்
  2. உளுந்து மாவு - 1 தேக்கரண்டி
  3. வெல்லம் - 1 கப்
  4. துருவப்பட்ட தேங்காய் - 1/4 கப்
  5. எள் - 1ல் இருந்து 2 தேக்கரண்டி
  6. ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி
  7. நெய் அல்லது வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  8. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் அரிசி மாவை காயவைத்து ஒருநிமிடத்திற்கு வறுத்துக்கொள்ளவும். (வறுக்கும்போது நிறம் மாறாமல் இருக்கவேண்டும், கவனம்)
  2. பொன்னிறமாகும் வரை பருப்பையும் வறுத்துக்கொண்டு, பருப்பையும் மாவையும் மாவு நிலைக்கு தயாரித்துக்கொள்ளவும். இந்த மாவுகளைச் சலித்து எடுத்து வைத்துக்கொள்க.
  3. எள்ளையும் தேங்காய்த் துருவலையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. வெல்லத்தைப் பொடி செய்து, கொதிக்கும் நீர் உள்ள ஒரு பாத்திரத்தில் மூழ்கச் செய்யவும். முழுமையாக கரையவிட்டு வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. மாவு, நெய், எள், தேங்காய், மிகக் குறைவாக உப்பு ஆகியவற்றை ஒன்றாக நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. அடுத்து வெல்லப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து கலக்கியபடியே சேர்க்கவும். இந்தக் கலவையை மிருதுவான மாவாகும்வரை பிசையவும்.
  7. இந்த கலவையிலிருந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தேவையான அளவு எண்ணெயை சூடுபடுத்தவும், எண்ணெய் சூடானதும், இந்த உருண்டைகளை சிறுசிறு தொகுப்புகளை வறுத்துக்கொள்ளவும்.
  8. தீயை குறைவாக வைத்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு இந்த உருண்டைகளை வறுத்துக்கொள்ளவும். ஆறியவுடன் ஒரு காற்றுப்புகா கொள்கலனில் அவற்றைச் சேமித்து வைத்துக்கொள்ளவும்.
  9. அவற்றை சூடாகவும் பரிமாறி மகிழலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்