அதிரசம் | Adhirasam in Tamil

எழுதியவர் Balachandrika Kandaswamy  |  12th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Adhirasam by Balachandrika Kandaswamy at BetterButter
அதிரசம்Balachandrika Kandaswamy
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  30

  மக்கள்

247

0

அதிரசம்

அதிரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Adhirasam in Tamil )

 • பச்சரிசி - 4 கப் [1 கப் அளவு = 240 மிலி]
 • வெல்லம் - 2 கப்
 • ஏலக்காய் - 3
 • எண்ணெய் - நன்றாக வறுப்பதற்கு

அதிரசம் செய்வது எப்படி | How to make Adhirasam in Tamil

 1. பச்சரிசியை 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து, தண்ணீரை முற்றிலுமாக வடிகட்டிவிடவும்.
 2. அரிசியை உலர்த்த வேண்டாம். அங்கே ஈரப்பதம் இருக்கவேண்டும்.
 3. பகுதிப்பகுதியாக மிக்சரில் அரிசியை மிருதுவான மாவாக அரைத்துக்கொள்ளவும். (வாங்கிய அரிசி மாவு போல் இல்லாமல் சற்றே கரடு முரடாக இருக்கவேண்டும்.
 4. இறுதித் தொகுப்பில், ஏலக்காயுடன் அரிசியை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
 5. அரைத்த அரிசியை சலித்துக்கொள்ளவும். மாவை அழுத்தி ஈரமானப் பொருளால் மூடி வைக்கவும்.
 6. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைச் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் அதை விட்டு கொதிக்கவிடவும்.
 7. ஒரு சில நிமிடங்களில் வெல்லாம் கரைந்துவிடும். கம்பி போன்ற பதம் வரை அதைக் கொதிக்கவிடவும்.
 8. சோதிப்பதற்கு, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சொட்டு சர்க்கரைப் பாகை விடவும், கரையாதிருந்தால், பாகு சரியான பதத்திற்கு வந்துவிட்டது. அதிரசம் தயாரிப்பதற்கு பதம் மிகவும் முக்கியமானது.
 9. வெல்லப் பாகை வடிகட்டி சலித்த அரிசி மாவின் மீது ஊற்றவும்.
 10. கரண்டியால் அல்லது தட்டைக்கரண்டியால் மெல்ல கலக்கவும்.
 11. தொடர்ந்து நீங்கள் கலக்கும்போது, வெல்லப் பாகு அரிசி மாவும் நன்றாகக் கலந்து மிருதுவான ஒரு மாவாக மாறும். காற்றுப்புகா பாத்திரத்திற்கு மாற்றி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 12. ஆரம்பத்தில் மாவு ஒட்டும் ஒட்டும் ஆனால் 12-24 மணி நேரங்களுக்கு விட்டுவைத்தால் மாவு அடர்த்தியாகிவிடும்.
 13. அறையின் வெப்பத்தில் 12 மணி நேரங்களுக்கு மாவை வைத்தாது அதிரசம் தயாரிப்பது சிறப்பு. குளிர்பதனப் பெட்டியில் வைத்தால். 4-5 நாட்களுக்குப் பிறகு நன்றாக இருக்கும்.
 14. 12 மணி நேரங்களுக்குப் பிறகு, சம அளவிலான உருண்டைகளாகப் பிரித்துக்கொள்ளவும். மாவு மிகவும் காய்ந்திருந்தால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். மாவு தளர்வாக இருக்கவேண்டும், இல்லையேல் அதிரசம் கடினமாக இருக்கும்.
 15. நன்றாக வறுப்பதற்காக ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்ளவும்.
 16. ஒரு சிப்லாக்கில் அல்லது சுத்தமான வேறு பிளாஸ்ட் கவரில் கொஞ்சம் எண்ணெய் தடவவும், உங்கள் கைகளிலுமு. ஒரு உருண்டையை எடுத்து மெதுவாக அழுத்தி வட்டமாக செய்யவும். மிகவும் மெலிதாகச் செய்யாதீர், அதிரசத்தை மொறுமொறுப்பாக்கிவிடும்.
 17. மையத்தில் ஒரு ஓட்டை போடவும், மையப் பகுதியும் முறையாக வெந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
 18. சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில் விடவும். தீ நடுத்தர நிலையில் இருக்கவேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக அதிரசத்தை நன்றாக பொரிக்கவேண்டும்.
 19. உப்பியதும், உடனடியாக திருப்பிப்போட்டு சமைக்கவும். பொன்னிறமானதும், எண்ணெயை வடிகட்டவும்.
 20. இந்தச் செயல்முறையை மீதமுள்ள மாவுக்கும் செய்யவும்
 21. அதிகப்படியான எண்ணெயை பேப்பர் துண்டில் வடிகட்டி, ஆறவிடவும்.
 22. ஆறியதும், காற்றுப்புகா கொள்கலனில் சேமித்து வைக்கவும்

எனது டிப்:

ஒருவேளை அதிரசம் கடினமாக வந்தால், பரிமாறுவதற்கு முன் 4-5 நிமிடங்கள் ஒரு இட்லி குக்கரில் அல்லது பிரஷர் குக்கரில் மிருதுவாக தயாரிப்பதற்காக வேகவைக்கவும் :). சிலர் காய்ந்த இஞ்சித் தூள் பயன்படுத்துவர். இது அதிகரசத்திற்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும். தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த சுவையும் நறுமணமும் பிடிக்காது, அதனால் அதை நான் சேர்க்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் காய்ந்த இஞ்சித்தூள் சேர்த்து, அதன்பிறகு ஏலக்காயுடன் அதில் 3 சிட்டிகை சேர்க்கலாம்.

Reviews for Adhirasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.