BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கல்யாண ரசம்

Photo of Kalyana Rasam by Menaga Sathia at BetterButter
29
71
0(0)
0

கல்யாண ரசம்

Nov-16-2015
Menaga Sathia
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సూపులు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
  2. தக்காளி - 2 பெரியது
  3. வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
  4. கறிவேப்பிலை - 1 கொத்து
  5. நறுக்கப்பட்ட கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
  6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் - 1
  8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவிற்கு
  10. அரைப்பதற்கு நெய் - 1 தேக்கரண்டி
  11. மல்லி - 2 தேக்கரண்டி
  12. காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
  13. மிளகு - 1 தேக்கரண்டி
  14. துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
  15. தாளிப்புக்கு நெய் - 1 தேக்கரண்டி
  16. கடுகு - 1/2 தேக்கரண்டி
  17. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  18. கறிவேப்பிலை - கொஞ்சம்
  19. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெந்நீரில் புளியை ஊறவைத்து சாறு பிழிந்துகொள்க.
  2. ஒரு கடாயில் நெய்யையும் அரைப்பதற்கான சேர்வைப்பொருள்களையும் சேர்த்துக்கொள். பருப்பு பொன்னிறமாகும்வரை வறுக்கவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. 1 தக்காளி + சீரகத்துடன் கரடுமுரடான சாந்தாக அரைத்துக்கொள்க
  4. ஒரு பாத்திரத்தில், புளி சாறு, மஞ்சள் தூள், பிளக்கப்பட்ட பச்சை மிளகாள் 1 நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்க்கவும்.
  5. புளியின் பச்சை வாடை போகும்வரை கொதிக்கவிட்டு, அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்திற்கு கலக்கவும்.
  6. தேவையானத் தண்ணீர் சேர்த்து சமைத்த துவரம்பருப்புடன் சேர்த்து கலக்கவும்.
  7. எலலா பக்கங்களில் பொங்கும்வரை கொதிக்க வைக்கவும், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து தீயை நிறுத்தவும்.
  8. இறுதியான தாளிப்பின் கீழ் கொடுக்கப்பட்டப் பொருள்களோடு தாளிக்கவும், ரசத்தில் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்