வீடு / சமையல் குறிப்பு / இறைச்சித் துண்டு ஆம்லேட்/கொத்துக்கறி ஆம்லேட்

Photo of Minced Meat Omlette / Kothukari Omlette by Menaga Sathia at BetterButter
1358
20
0.0(0)
0

இறைச்சித் துண்டு ஆம்லேட்/கொத்துக்கறி ஆம்லேட்

Nov-18-2015
Menaga Sathia
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறைச்சித் துண்டுகள் - 100 கிராம்
  2. முட்டை - 2
  3. வெங்காயம் - 1 (நன்றாக நறுக்கப்பட்டது)
  4. பச்சை மிளகாய் - 2 (நன்றாக நறுக்கப்பட்டது)
  5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  7. சிவப்பு மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  8. பெருஞ்சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. நறுக்கப்பட்ட இறைச்சியைக் கழுவி தண்ணீரை வடிக்கட்டவும்.
  2. ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்தி, நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். அனைத்து மசாலாக்களையும் நறுக்கிய இறைச்சியையும் சேர்த்துக்கொள்க. 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து ஆறவிடவும்.
  3. இன்னொரு பாத்திரத்தில் முட்டையை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடித்துக்கொள்க. வேகவைத்த இறைச்சியைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, ஒரு பெரிய கரண்டியால் முட்டைக்கலவையை ஊற்றவும். ஒரு பக்கம் வேகவைத்து மெல்ல ஆம்லேட்டைத் திருப்பிப்போட்டு அடுத்தப் பக்கத்தையும் வேகவைக்கவும்.
  5. ரசம் அல்லது சாம்பார் சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்