மீன் பஜ்ஜி | Fish pakora / Fish fritters in Tamil

எழுதியவர் Rashmi Krishna  |  19th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Fish pakora / Fish fritters by Rashmi Krishna at BetterButter
மீன் பஜ்ஜிRashmi Krishna
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

925

0

மீன் பஜ்ஜி recipe

மீன் பஜ்ஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make Fish pakora / Fish fritters in Tamil )

  • மீன் துண்டுகள் - 500 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - 3ல் இருந்து 4 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • ஓமம் - 1 தேக்கரண்டி
  • சீரகத்தூள் - 1-2 தேக்கரண்டி
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள் (நிறத்திற்காகத்தான் தவிர்க்கலாம்)
  • 1 எலுமிச்சையின் சாறு
  • கடலை மாவு - 1 1/2 - 2 கப்
  • சுவைக்கேற்ற உப்பு
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • கொஞ்சம் முட்டைக்கோஸ் மணி மிளகு அலங்கரிப்பதற்காக

மீன் பஜ்ஜி செய்வது எப்படி | How to make Fish pakora / Fish fritters in Tamil

  1. மீன் துண்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டதை உறுதிசெய்யவும். தண்டுகள் பெரியதாக இருந்தால் கடிப்பதற்குத் தோதாக வெட்டிககொள்ளவும். தட்டி உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பெரிய பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், உப்பு, 1 எலுமிச்சையின் சாறு சேர்க்கவும். கடலை மாவு சேர்த்து அடர்த்தியான மாவாகக் கலந்துகொள்ளவும்.
  3. மீன் துண்டுகளை இந்த மாவோடு சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, துண்டுகளைப் பொரிப்பதற்குப் போதுமான எண்ணெயைச் சேர்த்துக்கொள்க.
  5. மெதுவாக நன்றாக சாந்து பூசிய மீனை சூடான எண்ணெயில் விட்டு, பொன்னிறமாக மாறும்வரை வரை பொரிக்கவும்.
  6. பொரிப்பதற்கு 2ல் இருந்து 3 துண்டுகள் மட்டும் அதிக நெறுக்கத்தைத் தவிர்ப்பதற்காகச் சூடான எண்ணெயில் போடவும்.

எனது டிப்:

மீன் துண்டுகளை தட்டி உலர்த்துவது மாவை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும். சுவைக்கும் சிவப்பு நிறத்திற்கும் லால் மிளகாயை அதிகம் சேர்க்கவும்.

Reviews for Fish pakora / Fish fritters in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.