ஆந்திரா மிளகு சிக்கன் | Andhra Pepper Chicken in Tamil

எழுதியவர் Moumita Malla  |  19th Nov 2015  |  
5 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Andhra Pepper Chicken by Moumita Malla at BetterButter
ஆந்திரா மிளகு சிக்கன்Moumita Malla
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1345

2

ஆந்திரா மிளகு சிக்கன் recipe

ஆந்திரா மிளகு சிக்கன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Andhra Pepper Chicken in Tamil )

 • சிக்கன் - 500 கிராம்
 • வெங்காயம் - 1 (நறுக்கியது)
 • பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 • இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - 10ல் இருந்து 12
 • மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 • எண்ணெய் - 1/4 கப்
 • நசுக்கிய மிளகு - 4 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
 • கொத்துமல்லி - 1/2 கப்

ஆந்திரா மிளகு சிக்கன் செய்வது எப்படி | How to make Andhra Pepper Chicken in Tamil

 1. சிக்கன் துண்டை மஞ்சள் தூள், இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு, 2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்து மேரினேட் செய்து பிரிஜ்ஜில் 30 நிமிடங்கள் வைக்கவும்.
 2. ஒரு அகலமானக் கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி இலவங்கப்பட்டை, கிராம்பு, 3/4 பாகம் கறிவேப்பிலையுடன் தாளித்துக்கொள்ளவும்.
 3. நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும்.
 4. நறுக்கிய பச்சை மிளகாயையும் மேரினேட் செய்த சிக்கனையும் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 5. மல்லித்தூள் நசுக்கிய மிளகு சேர்த்து நன்றாகக் கலந்து சிறு தீயில் எண்ணெய் பிரியும்வரை வதக்கிக் கலக்கிக்கொள்ளவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்.
 6. 1/4 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதி வந்ததும் தீயைக் குறைத்து மூடவும். சிக்கன் வேகும்வரை வேகவைக்கவும். சிக்கன் மிருதுவாக/வெந்ததும் மூடியைத் திறந்து ஈரப்பதம் வெளியேறும்வரை வேகவைக்கவும்.
 7. நறுக்கிய 3/4 பங்கு கொத்துமல்லியையும் மீதமுள்ள கறிவேப்பிலையையும் தூவவும்.
 8. பரிமாறுவதற்கு முன் 1 தேக்கரண்டி நசுக்கிய மிளகு, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மீதமுள்ள கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
 9. சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

ரெடி மேடாகக் கிடைக்கும் மிளகுத் தூளுக்குப் பதிலாக நான் பொரபொரப்பாக அரைத்துக்கொண்ட கருமிளகை எப்போதும் பயன்படுத்துவேன், இதன்படியாக, கருமிளகின் புத்தம்புதிய வாசனையை நீங்கள் பெறுவீர்கள்.

Reviews for Andhra Pepper Chicken in tamil (2)

selvi sakthivela year ago

Super... Very tasty.....
Reply

jothivelu sangeetha2 years ago

Super dish
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.