கொழுப்பற்ற காலை உணவு பிரெட் | Fatfree Breakfast Bread in Tamil

எழுதியவர் Namita Tiwari  |  19th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Fatfree Breakfast Bread by Namita Tiwari at BetterButter
கொழுப்பற்ற காலை உணவு பிரெட்Namita Tiwari
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  35

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2387

0

கொழுப்பற்ற காலை உணவு பிரெட் recipe

கொழுப்பற்ற காலை உணவு பிரெட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Fatfree Breakfast Bread in Tamil )

 • 1-2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் கிண்ணத்திலும் பிரெட் பாத்திரத்தில் தடவுவதற்காக.
 • 2 மற்றும் 1/4 தேக்கரண்டி உடனடி உலர் ஈஸ்ட்
 • 2 தேக்கரண்டி சர்க்கரை
 • 1/4 கப் தயிர்
 • 3/4ல் இருந்து 1 கப் வெதுவெதுப்பான தண்ணீர்
 • 1 சிட்டிகை பேக்கிங் சோடா
 • 1 மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு
 • 3 கப் மைதா

கொழுப்பற்ற காலை உணவு பிரெட் செய்வது எப்படி | How to make Fatfree Breakfast Bread in Tamil

 1. முதல் 3 பொருள்கள் ஒரு கிண்ணத்தில் அடித்துக்கொள்ளவும். 3/4 வெதுவெதுப்பானத் தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து ஈஸ்ட்டைச் சேர்க்கவும். மூடி 15 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும். மென்மையாகும்வரை தயிரைக் கடைந்துகொள்க. அதன்பின்னர் இவற்றை ஈஸ்ட் கலவையில் சேர்க்கவும்.
 2. அடுத்து திரவப் பொருள்களை மாவுக் கலவையில் சேர்க்கவும். 5ல் இருந்து 6 நிமிடங்கள் பிசைந்துகொள்க. மென்மையான சற்றே ஒட்டும் பதத்தில் உள்ள மாவு வரும்வரை தண்ணீர் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.
 3. மாவை எண்ணெய் தடவியக் கிண்ணத்திற்கு மாற்றுக. மாவைத் திருப்பிப்போடவும், எண்ணெய் எல்லாபக்கமும் சமமாக பூசப்பட்டு இருப்பதற்காக. 1ல் இருந்து 1 1/2 மணி நேரம் அல்லது இரட்டிப்பாக உப்பும் வரை விட்டுவைக்கவும்.
 4. ஒரு 8 ½ x 4 ½ இன்ச் லோஃப் பாத்திரத்தில் எண்ணெய் தடவிக்கொள்க.
 5. மாவைக் குத்தி மேலும் 5 நிமிடங்களுக்கு மெதுவாக பிசையவும். மாவை செவ்வகமாக உருட்டிக்கொள்ளவும். லோஃப் பாத்திரத்தைவிட அகலமாக இருக்கக்கூடாது.
 6. மாவை உங்களை நோக்கி உருட்டிக்கொள்க. அழுத்தினால் ஒட்டிக்கொள்ளவேண்டும். உருட்டியதை எண்ணெய் தடவி லோஃப் பாத்திரத்தில் வைக்கவும். மூடி இரட்டிப்பு அளவு உப்பும் வரை விட்டுவைக்கவும்.
 7. 190 டிகி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்யப்பட்ட ஓவனில் 30ல் இருந்து 35 நிமிடங்கள் அல்லது லோஃப் பொன்னிறமாகும்வரையில் அடிப்பாகத்தைத் தட்டினால் சத்தம்கேட்கும் வரையில் பேக் செய்யவும்.
 8. 10 நிமிடங்களுக்குப் பிறகு பாத்திரத்தில் இருந்து எடுத்து ஆறியதும் துண்டுபோட்டு பாலுடன் அல்லது தேனீருடன் விருப்பத்திற்கேற்ப பரிமாறவும்.

எனது டிப்:

மாவை மென்மையாகவும் இலகுத்தன்மை உடையதாகவும் வரும்வரை மாவை பிசைந்துகொள்ளவும். மேலும் 50% மைதாவை, 25% முழு கோதுமை, 25% ஓட்சைச் சேர்ப்பதன்மூலம் ஆரோக்கியமான ஒரு வகையை நீங்கள் முயற்சிக்கலாம்.

Reviews for Fatfree Breakfast Bread in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.