வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு பருப்பு உருண்டை குழம்பு/செட்டிநாடு துவரம்பருப்பு உருண்டை குழம்பு

Photo of Chettinad Paruppu Urundai Kuzhambu/Chettinad Toor dal balls gravy by Priya Suresh at BetterButter
6765
168
4.5(0)
1

செட்டிநாடு பருப்பு உருண்டை குழம்பு/செட்டிநாடு துவரம்பருப்பு உருண்டை குழம்பு

Nov-19-2015
Priya Suresh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பருப்பு உருண்டைகளுக்கு: 1 கப் துவரம்பருப்பு
  2. 3 காய்ந்த மிளகாய்
  3. 1 தேக்கரண்டி சீரகம்
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. 1/4 கப் மெலிதாக நறுக்கப்பட்ட வெங்காயம்
  6. 5 பூண்டு பற்கள் (மெலிதாக வெட்டப்பட்டது)
  7. கொஞ்சம் கறிவேப்பிலை
  8. 2 தேக்கரண்டி துருவப்பட்ட தேங்காய்
  9. குழம்புக்கு: 2 வெங்காயம் (மெலிதாக நறுக்கப்பட்டது)
  10. 2 தக்காளி (நறுக்கப்பட்டது)
  11. 5 பூண்டு பற்கள்
  12. 1 தேக்ரண்டி கடுகு
  13. 1/4 தேக்கரண்டி சீரகம்
  14. கொஞ்சம் கறிவேப்பிலை
  15. சுவைக்கேற்ற உப்பு
  16. அரைப்பத்றகு: 1 தேக்கரண்டி கசகசா
  17. 2 தேக்கரண்டி வறுத்த பருப்பு/பொட்டுக்கடலை
  18. 1/4 கப் துருவப்பட்ட தேங்காய்
  19. 1/2 தேக்கரண்டி மிளகு
  20. 1 கிராம்பு
  21. 1 சிறிய துண்டு இலவங்கப்பட்டை
  22. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  23. 1 தேக்கரண்டி சீரகம்
  24. 1 தேக்கரண்டி மல்லி விதைகள்
  25. 5 காய்ந்த மிளகாய்

வழிமுறைகள்

  1. உருண்டை தயாரிப்பதற்கு: குறைந்தது 2 மணி நேரமாவது துவரம்பருப்பை ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி பருப்போடு சிவப்பு மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு எடுத்துககொள்ளவும். கரடுமுரடான சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. வெங்காயம், பூண்டு, துருவிய தேங்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். இப்போது அவற்றை நீங்கள் வேகவைக்கலாம் அல்லது நன்றாக பொரிக்கலாம். ஆனால் நான் அவற்றை குழம்பு சமைக்கும்போதே நேராகப் போட்டுவிட்டேன்.
  3. குழம்பு தயாரிக்க: 'அரைப்பதற்கு' கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சேர்வைப்பொருள்களையும் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். போதமான அளவிற்கு எண்ணெயை சூடுபடுத்திக்கொள்ளவும். அது கடுகு மற்றும் பெருஞ்சீரகத்தைப் பொரிக்கட்டும்.
  4. கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்துக்கொள்க. இப்போது வெங்காயம். பூண்டு சேர்த்து சில நிமிடங்களுக்கு கலக்கி தக்காளியைச் சேர்த்துக்கொள்ளவும், அவை கூழாகும்வரை சமைக்கவும். இப்போது அரைத்த சாந்தை சேர்த்து சிம்மில் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
  5. 2-3 கப் தண்ணீர் சேர்த்து பொதிக்கவிடவும். தீயை சிம்மில் வைத்து, பருப்பு உருண்டைகளை சமைக்கப்படும் குழம்பில் சேர்க்கவும்.
  6. உருண்டையைத் தொந்தரவு செய்யாதீர், பாத்திரத்தை மூடியால் மூடி சிம்மில் குறைந்தது 10 நிமிடங்கள் பருப்பு உருண்டைகள் வேகும்வரை சமைக்கவும். குழம்பு அடர்த்தியாக இருந்தால், தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம், தேவைக்கேற்ப. உடனே சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்