மிருதுவான பட்டாணி கச்சோரி | Khasta matar kachori in Tamil

எழுதியவர் Bindiya Sharma  |  20th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Khasta matar kachori by Bindiya Sharma at BetterButter
மிருதுவான பட்டாணி கச்சோரிBindiya Sharma
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4262

0

மிருதுவான பட்டாணி கச்சோரி recipe

மிருதுவான பட்டாணி கச்சோரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Khasta matar kachori in Tamil )

 • மைதா- 1 1/2 கப்
 • எண்ணெய்/நெய்- 2 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ப உப்பு
 • பிணைவதற்கு வெதுவெதுப்பான தண்ணீர்
 • உள்ளே வைப்பதற்கு-
 • 1 1/2 கப் வேகவைத்த பட்டாணி
 • எண்ணெய்- 1 தேக்கரண்டி
 • சிகப்புமிளகாய்- 1/4 டீக்கரண்டி
 • கரம் மசாலா- 1/4 டீக்கரண்டி
 • சீரகம்- 1/4 டீக்கரண்டி
 • உலர்ந்த மாங்காய்தூள்- 1/2 டீக்கரண்டி
 • பச்சைமிளகாய்-1 வெட்டப்பட்டது
 • சோம்பு நொறுக்கியது- 1/4 டீக்கரண்டி
 • சாட் மசாலா- 1 டீக்கரண்டி
 • உப்பு- சிறிதளவு
 • துருவிய இஞ்சி-1/4 டீக்கரண்டி
 • எண்ணெய் ஆழமாக வறுப்பதற்கு

மிருதுவான பட்டாணி கச்சோரி செய்வது எப்படி | How to make Khasta matar kachori in Tamil

 1. மைதா மற்றும் உப்பை ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும், எண்ணெய் மற்றும் பிரட் தூள்கள் சேர்த்து விரல்களால் நன்றாக பிணைந்துக்கொள்ளவும். சலித்த மாவில் வெந்நீர் சேர்த்து பதமாக பிணைந்துக்கொளவும். அதனை பிளாஸ்டிக் உறையை கொண்டு மூடவும். மாவை தனியாக வைத்துவிட்டு உள்ளே வைப்பதற்கு தேவையானவற்றை தயார் செய்யவும்.
 2. உள்ள வைப்பதற்கு தேவையானவை- எண்ணையை சூடுபடுத்திக்கொண்டு அதில் சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்துக் கொள்ளவும். அதனை வதக்கியப் பின் அதில் பட்டாணி சேர்த்து நன்றாக மசிக்கவும். பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா, சாட் மசாலா, உலர் மாங்காய்தூள், சோம்பு மற்றும் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். சுவையை சரிபார்த்துக்கொண்டு ஆற விடவும்.
 3. மாவை 4 அங்குல உருண்டைகளாக சமமான அளவில் உருட்டிக்கொள்ளவும் பட்டாணியை பெரிய தேக்கரண்டி அளவில் வைத்து மூடிக்கொள்ளவும். அதனை கனமாக தேய்த்துக் கொள்ளவும். எண்ணைய்யை மிதமாக சூடு செய்துக்கொள்ளவும், நடுத்தரமான சூட்டில் இரண்டு கச்சோரியை ஒரே நேரத்தில் பொறிக்கவும்.
 4. மிருதுவாகவும் மற்றும் பொன்னிறமாகவும் வறுத்துக்கொள்ளவும்.

எனது டிப்:

புளிப்பு மற்றும் இனிப்புடன் கூடிய சட்னியுடன் இதை பரிமாறவும்.

Reviews for Khasta matar kachori in tamil (0)